சினிமா செய்திகள்

கொரோனா விழிப்புணர்வு படத்தில் வடிவுக்கரசி + "||" + Corona in the Corona Awareness film

கொரோனா விழிப்புணர்வு படத்தில் வடிவுக்கரசி

கொரோனா விழிப்புணர்வு படத்தில் வடிவுக்கரசி
கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு விழிப்புணர்வு படங்கள் எடுத்து வெளியிட்டு வருகிறது.
கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு விழிப்புணர்வு படங்கள் எடுத்து வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே இந்த படங்களில் சசிகுமார், தேவயானி, சுஹாசினி, மனோபாலா, யோகிபாபு, ரோபோ சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். தற்போது வடிவுக்கரசியும் கொரோனா விழிப்புணர்வு படத்தில் நடித்து இருக்கிறார். சமூக விலகல், கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், முககவசம் அணிதல் போன்றவற்றை இந்த விழிப்புணர்வு படத்தில் அவர் வற்புறுத்தி உள்ளார். இதில் வடிவுக்கரசி மீன் வியாபாரியாக வந்து கொரோனா விழிப்புணர்வு செய்வது போன்று காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த படத்தை கட்டில் பட டைரக்டர் இ.வி.கணேஷ்பாபு இயக்கி உள்ளார். அவர் கூறும்போது, கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை மீட்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது. அவர்களின் வாழ்வாதாரத்துக்காக சில தளர்வுகள் அறிவித்தாலும் பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்கும் பொறுப்பு அவரவர்களுக்கு இருக்கிறது என்பதை வலியுறுத்துவதுபோன்று வடிவுக்கரசியின் கொரோனா விழிப்புணர்வு படம் தயாராகி உள்ளது என்றார். இதில் காதல் சுகுமாரும் நடித்து இருக்கிறார்.