தலைமறைவான டி.வி. நடிகைக்கு முன் ஜாமீன்


தலைமறைவான டி.வி. நடிகைக்கு முன் ஜாமீன்
x
தினத்தந்தி 30 Sep 2020 12:09 AM GMT (Updated: 2020-09-30T05:39:49+05:30)

கேரளாவில் தலைமறைவான டி.வி. நடிகைக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது.

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள கொட்டியம் பகுதியை சேர்ந்த ஹாரிஸ் என்பவரும் அதே பகுதியை சேர்ந்த ரம்சி என்ற பெண்ணும் காதலித்தனர். ரம்சி கர்ப்பமானார். இவர்கள் திருமணத்துக்கு முதலில் சம்மதம் சொன்ன ஹாரிஸ் குடும்பத்தினர் பின்னர் வசதியான இடத்தில் அவருக்கு பெண் பார்த்தனர். ரம்சியை விட்டு ஹாரிசும் ஒதுங்கினார். இதனால் மனம் உடைந்த ரம்சி தற்கொலை செய்து கொண்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹாரிசை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். ஹாரிசின் அண்ணன் மனைவி லட்சுமி பிரமோத்தும் ரம்சிக்கு எதிராக செயல்பட்டு போலி திருமண சான்றிதழ் வாங்கி கொடுத்து தனியார் ஆஸ்பத்திரியில் ரம்சியின் கர்ப்பத்தை கலைக்க வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

லட்சுமி பிரமோத் பவுர்ணமி திங்கள், பூக்கலாம் வரவாயி உள்பட பல மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்து இருக்கிறார். அவரை போலீசார் தேடியபோது தலைமறைவானார். முன் ஜாமீன் கேட்டு கொல்லம் செசன்ஸ் கோர்ட்டிலும் மனுதாக்கல் செய்தார். இதையடுத்து தொலைக் காட்சி படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டி இருப்பதால் அக்டோபர் 6-ந்தேதி வரை லட்சுமி பிரமோத்துக்கு முன்ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது.

Next Story