பாகிஸ்தான் அரசு ராஜ்கபூர், திலீப்குமார் வீடுகளை வாங்குகிறது


பாகிஸ்தான் அரசு ராஜ்கபூர், திலீப்குமார் வீடுகளை வாங்குகிறது
x
தினத்தந்தி 30 Sep 2020 12:16 AM GMT (Updated: 30 Sep 2020 12:16 AM GMT)

பிரபல இந்தி நடிகர்கள் ராஜ் கபூர், திலீப் குமார் வீடுகளை பாகிஸ்தான் அரசு வாங்குகிறது.

பிரபல இந்தி நடிகர்கள் ராஜ் கபூர், திலீப் குமார் ஆகிய இருவரும் பாகிஸ்தானில் உள்ள பெஷாவரில் பிறந்தவர்கள். சுதந்திரத்துக்கு பிறகு இருவரும் குடும்பத்தோடு இந்தியா வந்து இங்கேயே குடியேறி விட்டனர். இருவரின் மூதாதையர் வீடுகளும் பெஷாவரில் சிதிலமடைந்த நிலையில் உள்ளன. இந்த வீடுகளை விலைக்கு வாங்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்து உள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் தொல்பொருள் துறை தலைவர் அப்துஸ் சமத் அளித்துள்ள பேட்டியில், “பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்கவா மாகாணத்தில் ராஜ்கபூர், திலீப் குமார் ஆகியோரின் வீடுகள் உள்ளன. அங்குள்ள பெஷாவர் நகரில் ராஜ்குமார் வீடு உள்ளது. இந்த பகுதி கபூர் ஹவேலி என்று அழைக்கப்படுகிறது. ராஜ்கபூரின் வீடு 1918 மற்றும் 1922-ம் ஆண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்டது.

இந்த வீட்டில்தான் ராஜ்கபூர் பிறந்தார். பெஷாவரில் உள்ள கிஸ்சா கவானி பஜார் பகுதியில் திலீப் குமார் வீடு அமைந்துள்ளது. இந்த வீடு 2014-ல் தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. வீட்டை இடித்து வணிகவளாகமாக மாற்ற உரிமையாளர்கள் முடிவு செய்தபோது தொல்பொருள் துறையினர் தடுத்து விட்டனர். இந்த இரண்டு வீடுகளும் பாரம்பரியமானவை என்பதால் பாகிஸ்தான் அரசு வாங்க முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது” என்றார்.

Next Story