சினிமா செய்திகள்

இளம் நடிகர் தற்கொலை + "||" + Young actor commits suicide

இளம் நடிகர் தற்கொலை

இளம் நடிகர் தற்கொலை
கொரோனா காலத்தில் நடிகர்கள் தொடர்ந்து மரணம் அடையும் சம்பவங்கள் திரையுலகை உலுக்கி வருகிறது.
கொரோனா காலத்தில் நடிகர்கள் தொடர்ந்து மரணம் அடையும் சம்பவங்கள் திரையுலகை உலுக்கி வருகிறது. ஏற்கனவே இர்பான்கான், ரிஷிகபூர் ஆகியோர் மரணம் அடைந்தனர். இளம் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டார். பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா, மலையாள நடிகர் கலபாவன் ஜயேஷ் உள்ளிட்ட சிலர் மரணம் அடைந்தனர்.


இந்த நிலையில் தற்போது இளம் நடிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது பெயர் அக்சத் உட்கர்ஷ். (வயது36) இவர் பீகாரில் உள்ள முஸாபர்பூரை சேர்ந்தவர் எம்.பி.ஏ படித்து விட்டு போஜ்புரி படங்களில் நடித்து வந்தார். மும்பை அந்தேரி பகுதியில் தங்கி இந்தி படங்களில் நடிக்கவும் வாய்ப்பு தேடினார். இந்த நிலையில் அக்சத் வீட்டில் உள்ள படுக்கை அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். பிணத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். கொரோனாவால் படப்பிடிப்பு இல்லாமல் வருமானம் இன்றி அக்சத் தவித்ததாகவும் நண்பர்கள், உறவினர்களிடம் கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியாமல் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். ஆனால் அக்‌ஷத்தின் உறவினர்கள் இது கொலை என்கின்றனர்.