கொரோனா பாதிப்பால் எருமை மாடுகள் வளர்க்கும் நடிகை


கொரோனா பாதிப்பால் எருமை மாடுகள் வளர்க்கும் நடிகை
x
தினத்தந்தி 30 Sep 2020 10:39 PM GMT (Updated: 30 Sep 2020 10:39 PM GMT)

நடிகர்கள், இயக்குனர்கள் வருமானம் இன்றி வேறு தொழில்களுக்கு மாறி வருகிறார்கள்.

கொரோனாவால் திரையுலகம் முடங்கி உள்ளது. ஊரடங்கை தளர்த்தியும் முன்னணி நடிகர், நடிகைகள் படப்பிடிப்புகளுக்கு செல்ல தயங்குகிறார்கள். இதனால் நடிகர்கள், இயக்குனர்கள் வருமானம் இன்றி வேறு தொழில்களுக்கு மாறி வருகிறார்கள். இந்தி நடிகர் சோலங்கி திவாகர் பழ வியாபாரம் செய்கிறார். தமிழ் பட இயக்குனர் ஆனந்த் மளிகை கடை திறந்துள்ளார். மராத்தி நடிகர் ரோஹன் பட்னேகர் மீன் வியாபாரம் செய்கிறார். மலையாள நடிகர் வினோத் கோவூர் கருவாடு விற்கிறார்.

இந்த நிலையில் பிரபல மலையாள நடிகை மஞ்சு பிள்ளை எருமை மாடு வளர்க்கும் தொழிலில் இறங்கி உள்ளார். இவர் 1990-களில் அதிக மலையாள படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். சுஜித் வாசுதேவ் என்ற ஒளிப்பதிவாளரை திருமணம் செய்து கொண்டார். கொரோனாவால் படப்பிடிப்புகள் இல்லாத நிலையில் வருமானம் நின்று போனதால் கணவரின் ஆலோசனையின் பேரில் எருமை வளர்ப்பில் இறங்கி இருப்பதாக மஞ்சு பிள்ளை தெரிவித்துள்ளார். எருமை பண்ணை வைக்க அரியானாவில் இருந்து முரா என்ற வகையை சேர்ந்த 50 எருமைகளை வாங்கி இருக்கிறார். எருமைகளை மேய விடுவது மற்றும் தொழுவத்தில் கட்டுவது போன்ற புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

Next Story