சினிமா செய்திகள்

சுருதிஹாசன், ஆண்ட்ரியா நடிப்பில் 5 டைரக்டர்கள் இயக்கிய படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ் + "||" + The film, directed by 5 directors, was released on ODT

சுருதிஹாசன், ஆண்ட்ரியா நடிப்பில் 5 டைரக்டர்கள் இயக்கிய படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்

சுருதிஹாசன், ஆண்ட்ரியா நடிப்பில் 5 டைரக்டர்கள் இயக்கிய படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்
கொரோனா ஊரடங்கில் ஐந்து குறும்படங்களின் தொகுப்பாக உருவாகி உள்ள புத்தம் புது காலை என்ற திரைப்படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
கொரோனா ஊரடங்கில் ஐந்து குறும்படங்களின் தொகுப்பாக உருவாகி உள்ள புத்தம் புது காலை என்ற திரைப்படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. காதல், நம்பிக்கை உள்ளிட்ட பல விஷயங்களை உள்ளடக்கி இந்த படத்தை எடுத்துள்ளனர். இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இளமை இதோ இதோ குறும்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். காளிதாஸ் ஜெயரம், ஊர்வசி கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்துள்ளனர். அவரும் நானும் அவளும் நானும் குறும்படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி உள்ளார். இதில் எம்.எஸ்.பாஸ்கர் ரீத்து வர்மா ஆகியோரும் சுஹாசினி இயக்கி உள்ள காபி, எனி ஒன்? குறும்படத்தில் அனுஹாசன், சுருதிஹாசன் ஆகியோரும் ராஜீவ் மேனன் இயக்கிய ரீயூனியன் குறும்படத்தில் ஆண்ட்ரியா, லீலா சாம்சன் குருச்சரன் ஆகியோரும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மிராக்கிள் குறும்படத்தில் பாபி சிம்ஹா, முத்துக்குமார் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வருகிற 16-ந்தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது.