சினிமா செய்திகள்

புதிய பாதை 2-ல் சிம்பு + "||" + Simbu on puthiya pathai 2

புதிய பாதை 2-ல் சிம்பு

புதிய பாதை 2-ல் சிம்பு
பார்த்திபன் இயக்கி நடித்த முதல் படமான புதிய பாதை 1989-ல் திரைக்கு வந்து பெரிய வெற்றி பெற்றது.
பார்த்திபன் இயக்கி நடித்த முதல் படமான புதிய பாதை 1989-ல் திரைக்கு வந்து பெரிய வெற்றி பெற்றது. இதில் நாயகியாக சீதா நடித்து இருந்தார். இந்த படத்துக்கு சிறந்த தமிழ் படம் மற்றும் சிறந்த துணை நடிகை ஆகிய 2 தேசிய விருதுகளும் கிடைத்தன. துணை நடிகைக்கான விருதை மறைந்த நடிகை மனோரமா பெற்றார். தமிழக அரசின் சிறந்த படம் மற்றும் சிறந்த கதாசிரியருக்கான விருதையும் புதிய பாதை பெற்றது. புதிய பாதை படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் பார்த்திபன் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் பரவி வந்தன. இதில் கதாநாயகனாக நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது.


இதுகுறித்த கேள்விக்கு பார்த்திபன் தற்போது அளித்துள்ள பதிலில், “புதிய பாதை 2 படத்தில் சிம்பு நடித்தால் நன்றாக இருக்கும் சமீபத்தில் இதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்துள்ளது. விரைவில் அதற்கான பதில் கிடைக்கும். அதுபோல் என்னுடைய உள்ளே வெளியே படத்தை ரீமேக் செய்வதாக இருந்தால் அதிலும் கதாநாயகன் கதாபாத்திரத்தில் நடிக்க சிம்புதான் பொருத்தமாக இருப்பார்” என்றார். சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். கொரோனாவால் நிறுத்தி வைத்திருந்த இதன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளது.