சினிமா செய்திகள்

வில்லியாக நடிக்க தமன்னா கேட்ட ரூ.2 கோடி சம்பளம்? + "||" + To acting the villain Tamanna asked Rs 2 crore salary

வில்லியாக நடிக்க தமன்னா கேட்ட ரூ.2 கோடி சம்பளம்?

வில்லியாக நடிக்க தமன்னா கேட்ட ரூ.2 கோடி சம்பளம்?
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார் தமன்னா, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.
பாகுபலி மூலம் நடிப்பு திறமையை வெளிப்படுத்திய அவர் தற்போது தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது இந்தியில் அயுஷ்மன் குர்ரானா, ராதிகா ஆப்தே, தபு ஆகியோர் நடிப்பில் வெளிவந்து 3 தேசிய விருதுகளை பெற்ற அந்தாதுன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதில் நிதின் கதாநாயகனாகவும், ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் நபா நடேஷும் நடிக்கின்றனர். இந்தியில் தபு நடித்திருந்த வில்லி வேடத்தில் நடிக்க நயன்தாராவை அணுகினர். அவர் பல கோடிகள் சம்பளம் கேட்டதால் நதியா, ரம்யாகிருஷ்ணன் ஆகியோரை பரிசீலனை செய்து இறுதியாக தமன்னாவை தேர்வு செய்துள்ளனர். முதல் தடவையாக தமன்னா வில்லி வேடம் ஏற்கிறார். மெர்லபகா காந்தி இயக்குகிறார். வில்லியாக நடிக்க தனக்கு ரூ.2 கோடி சம்பளம் கேட்டதாகவும் அதை கொடுக்க பட நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தெலுங்கு இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது.