தலைவர் ரவிவர்மாவா, மனோபாலாவா? ‘சின்னத்திரை’ நடிகர் சங்கத்தில் திடீர் பிரச்சினை


தலைவர் ரவிவர்மாவா, மனோபாலாவா? ‘சின்னத்திரை’ நடிகர் சங்கத்தில் திடீர் பிரச்சினை
x
தினத்தந்தி 4 Oct 2020 12:16 AM GMT (Updated: 4 Oct 2020 12:16 AM GMT)

‘சின்னத்திரை’ நடிகர் சங்கத்தில், 2 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

‘சின்னத்திரை’ நடிகர் சங்கத்தில், 2 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அதன் தலைவராக இருப்பவர், ரவிவர்மா. இவருக்கும், சங்க நிர்வாகிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. துணைத்தலைவராக இருந்து வந்த மனோபாலா தலைமையில் நிர்வாகிகள் சிலர், ரவிவர்மாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். ரவிவர்மாவை தலைவர் பதவியில் இருந்து நீக்கி விட்டோம். புதிய தலைவராக மனோபாலாவை தேர்வு செய்து இருக்கிறோம் என்று அறிவித்து இருக்கிறார்கள்.

“என்னை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கு பொதுக் குழுவுக்குத்தான் அதிகாரம் இருக்கிறது. தனிப்பட்ட முறையில் பதவி நீக்கம் செய்வது செல்லாது. அதனால் நானே தலைவராக நீடிக்கிறேன்” என்று ரவிவர்மா கூறுகிறார்.

“மலேசியாவில் நடந்த கலைநிகழ்ச்சி மூலம் வசூலான தொகையில் கையாடல் நடந்துள்ளது. கொரோனா ஊரடங்கில் பாதிக்கப்பட்ட சங்க உறுப்பினர்களுக்கு உதவிகள் முறையாக போய் சேரவில்லை. அதிலும் முறைகேடு நடந்துள்ளது. எனவே ரவிவர்மாவை தலைவர் பதவியில் இருந்து நீக்குகிறோம். புதிய தலைவராக மனோபாலா இருப்பார்” என்று அவருடைய ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

இதனால் ‘சின்னத்திரை’ நடிகர் சங்கத்தில் குழப்பமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

Next Story