சினிமா செய்திகள்

பிரியா பவானி சங்கருக்கு யாருடன் காதல்? + "||" + Who is Priya Bhavani Shankar in love with?

பிரியா பவானி சங்கருக்கு யாருடன் காதல்?

பிரியா பவானி சங்கருக்கு யாருடன் காதல்?
தமிழ் பட உலகில் வளர்ந்து வரும் கதாநாயகிகளில், பிரியா பவானி சங்கரும் ஒருவர்.
தமிழ் பட உலகில் வளர்ந்து வரும் கதாநாயகிகளில், பிரியா பவானி சங்கரும் ஒருவர். புதுச்சேரியை சேர்ந்த இவரை கதாநாயகியாக அறிமுகம் செய்தவர், டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ். அறிமுகமான படம், ‘மேயாத மான்’.அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘கடைக்குட்டி சிங்கம்,’ ‘மான்ஸ்டர்,’ ‘மாபியா’ ஆகிய படங்களில் பிரியா பவானி சங்கர் நடித்தார்.

இப்போது, ‘இந்தியன்2,’ ‘பொம்மை’ ஆகிய படங்களுடன், ஹரீஸ் கல்யாண் ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடித்து வந்தார். இந்த படத்துக்கு, ‘ஓமணப்பெண்ணே’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இதில் பிரியா பவானி சங்கர் தொழில் அதிபராக நடிப்பதாக கூறப்படுகிறது.

அவருக்கும், ஆஸ்திரேலியாவை சேர்ந்த இளைஞருக்கும் காதல் இருந்து வருவதாக பேசப்பட்டது. இப்போது பிரியா பவானி சங்கருக்கும், ஹரீஸ் கல்யாணுக்கும் இடையே காதல் மலர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. யாருடன் உண்மையான காதல் இருக்கிறது? என்பதை பிரியா பவானி சங்கர்தான் உறுதிப்படுத்த வேண்டும்.