சினிமா செய்திகள்

கிரீன் இந்தியா சவாலை ஏற்று மரக்கன்றுகளை நட்ட நடிகை திரிஷா! + "||" + I accepted the #GreenIndiaChallenge and planted two saplings today Trish

கிரீன் இந்தியா சவாலை ஏற்று மரக்கன்றுகளை நட்ட நடிகை திரிஷா!

கிரீன் இந்தியா சவாலை ஏற்று மரக்கன்றுகளை நட்ட நடிகை திரிஷா!
கிரீன் இந்தியா சவாலை ஏற்று நடிகை திரிஷா மரக்கன்றுகளை நட்டுள்ளார்.
சென்னை,

சமூக வலைதளங்களின் வாயிலாக புதிய புதிய சேலஞ்ச்கள் அவ்வப்போது உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது இந்தியாவில் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் மரம் நடுவதை சவாலாக விடுத்து வருகின்றனர். தெலங்கானா எம்.பி சந்தோஷ் குமார் உலக சுற்றுச் சூழல் தினத்தனறு மரம் நடும் ‘கிரீன் இந்தியா சேலஞ்ச்’ என்ற ஒன்றை தொடங்கி வைத்தார்.


இந்த சேலஞ்சை விஜய், மகேஷ் பாபு, பிரபாஸ், நாகர்ஜுனா,  கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் செய்து அசத்தினர். சமீபத்தில் இந்த சேலஞ்சை செய்து முடித்த பிரகாஷ் ராஜ், நடிகர்கள் சூர்யா, மோகன் லால், ரக்‌ஷித் ஷெட்டி மற்றும் நடிகைகள் திரிஷா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோரை கிரீன் இந்தியா சேலஞ்சுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில், கிரீன் இந்தியா சவாலை ஏற்று, அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை த்ரிஷா. மேலும் அனைவரும் மரக்கன்றுகள் நட்டு இந்தியாவை பசுமையாக்குவோம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மரம் நடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிரீன் இந்தியா சேலஞ்ச் மேற்கொள்ளப்படுகிறது.