சினிமா செய்திகள்

கொரோனாவிலிருந்து குணமடைந்த நடிகை தமன்னா டிஸ்சார்ஜ் + "||" + Bahubali actress Tamannaah, COVID-19 positive, will be positive after discharge from hospital

கொரோனாவிலிருந்து குணமடைந்த நடிகை தமன்னா டிஸ்சார்ஜ்

கொரோனாவிலிருந்து குணமடைந்த நடிகை தமன்னா டிஸ்சார்ஜ்
கொரோனாவிலிருந்து குணமடைந்த நடிகை தமன்னா மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐதராபாத்,

கொரோனா, ஊரடங்கையும் மீறி நாடு முழுவதும் பரவி வருகிறது. நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்களும் இந்த வைரஸ் தொற்றில் சிக்குகிறார்கள். இந்தநிலையில் புதிதாக இணைதள தொடர் ஒன்றில் நடிப்பதற்காக சில தினங்களுக்கு முன்பு மும்பையில் இருந்து புறப்பட்டு வந்தார் நடிகை தமன்னா. இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி உள்ளது.


இந்தநிலையில் முன்னணி கதாநாயகியான தமன்னாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வருவதாக தெலுங்கு இணைய தளங்களும், ஆந்திர தொலைக்காட்சி ஊடகங்களும் செய்தி வெளியிட்டன.

தமன்னாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட தகவல் திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமன்னா விரைவில் குணமாக பிரார்த்தித்து சமூக வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் கொரோனாவிலிருந்து குணமடைந்த நடிகை தமன்னா மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராமில் டிஸ்சார்ஜ் தகவலை வெளியிட்டுள்ளார். அதில்,

இது ஒரு கடினமான வாரம், ஆனால் நான் நன்றாக இருப்பதாக உணர்கிறேன்.உலகெங்கிலும் உள்ள பலரை தொந்தரவு செய்யும் இந்த சுகாதார நெருக்கடியை நான் முழுமையாக சமாளிப்பேன் என்று நான் நம்புகிறேன்.

தற்போது நான் ஆலோசனையின் பேரில் சுய தனிமைபடுத்திக்கொண்டேன். நலம்பெற வேண்டி வாழ்த்திய அனைவரின் அன்பு, அக்கறை மற்றும் ஒரு பெரிய மெய்நிகர் அரவணைப்பு. பாதுகாப்பாக இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள் என அதில் கூறியுள்ளார்.

கடந்த ஆகஸ்டு மாதம் தமன்னாவின் தாய்- தந்தைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனை அவரே சமூக வலைத்தளத்தில் தெரிவித்தார். சிகிச்சைக்கு பிறகு அவர்கள் குணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.