சினிமா செய்திகள்

தொழில் அதிபருடன் காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம் + "||" + Kajal Agarwal soon married businessman

தொழில் அதிபருடன் காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்

தொழில் அதிபருடன் காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்
தொழில் அதிபருடன் நடிகை காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம் நடைபெறுகிறது.
காஜல் அகர்வால் தமிழில் நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகுராஜா, மாரி, மெர்சல், கோமாளி உள்ளிட்ட படங்களில் நடித்து முனன்ணி கதாநாயகியாக இருக்கிறார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். காஜல் அகர்வாலின் தங்கையும் நடிகையுமான நிஷா அகர்வாலுக்கு 2013-ல் திருமணம் நடந்தது. தொடர்ந்து காஜலுக்கும் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் திருமணத்தை தள்ளிவைத்து திரைப்படங்களில் கவனம் செலுத்தினார். தற்போது காஜல் அகர்வாலுக்கு 35 வயது ஆகிறது. அவருக்கு திருமணத்தை விரைவில் முடிக்க பெற்றோர் முடிவு செய்துள்ளனர். தொழில் அதிபர் ஒருவரை அவர் காதலிப்பதாகவும் ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் பேசப்பட்டது. இந்த நிலையில் காஜல் அகர்வாலுக்கு திருமணம் முடிவாகி விட்டதாக நேற்று தகவல் வெளியானது. மணமகன் பெயர் கவுதம் கிச்சுலு என்றும் கட்டிடங்களில் உள் அலங்காரம் செய்யும் தொழில் செய்கிறார் என்றும் கூறப்படுகிறது. இரு வீட்டார் குடும்பத்தினரும் பேசி திருமண தேதியை முடிவு செய்து விட்டதாகவும் விரைவில் அறிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. காஜல் அகர்வால் தற்போது கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்திலும் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா படத்திலும் நடிக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. காதலித்து திருமணம் செய்த ஒரே மாதத்தில் புதுப்பெண் கழுத்தை அறுத்து கொலை
காதலித்து திருமணம் செய்து கொண்ட ஒரே மாதத்தில் மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற ஆட்டோ டிரைவர், போலீசில் சரண் அடைந்தார்.
2. காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்; முதற்கட்ட வாக்கு பதிவு இன்று தொடக்கம்
ஜம்மு மற்றும் காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு இன்று தொடங்குகிறது.
3. திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்களிடம் 50 பவுன் நகை மோசடி - வங்கி ஊழியர் உள்பட 2 பேர் கைது
திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்களிடம் 50 பவுன் நகை மோசடி செய்த வங்கி ஊழியர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.