சின்னத்திரை நடிகர் சங்க மோதல்; மனோபாலா தலைவராக தேர்வானது செல்லாது: ரவிவர்மா


சின்னத்திரை நடிகர் சங்க மோதல்;  மனோபாலா தலைவராக தேர்வானது செல்லாது:  ரவிவர்மா
x
தினத்தந்தி 5 Oct 2020 11:36 PM GMT (Updated: 5 Oct 2020 11:36 PM GMT)

சின்னத்திரை நடிகர் சங்க தலைவராக மனோபாலா தேர்வானது செல்லாது என ரவிவர்மா கூறியுள்ளார்.

சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் ரவிவர்மா மீது அதிருப்தியாளர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறி அவரை சங்கத்தில் இருந்து நீக்கி விட்டு புதிய தலைவராக நடிகர் மானோபாலாவை தேர்வு செய்தனர். இதனை கண்டித்து ரவிவர்மாவும் அவரது ஆதரவாளர்களும் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

“சின்னத்திரை நடிகர் சங்கம் நேர்மையாக செயல்பட்டு வருகிறது. எந்த முறைகேடும் நடக்கவில்லை. சங்கத்தின் தலைவர் ரவிவர்மா மீது மனோபாலா, ரிஷி ஆகியோர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறியுள்ளனர். ரவிவர்மாவை தலைவர் பதவியில் இருந்து நீக்கியதாக அவர்கள் கையெழுத்து வாங்கிய சில உறுப்பினர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டவர்கள். ரவிவர்மாவை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் பேரவைக்கே உண்டு. கொரோனா நிவாரண பொருட்கள் முறையாக வழங்கப்பட்டன. சங்கத்தின் விதிகளின்படி ரவிவர்மா சங்கத்தின் தலைவராக தொடர்ந்து செயல்படுவார். சங்க விதிகளுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும். பொதுச்செயலாளர் ரிஷி கேசவன் அறிவித்த அறிவிப்புகள் அனைத்தும் சங்க விதிகளுக்கு எதிரானவை என்பதால் அவை செல்லாது. மனோபாலாவை தலைவராக தேர்வு செய்தததும் தவறு. சங்கத்துக்கு எதிரானது.  இவ்வாறு கூறினர்.

Next Story