சினிமா செய்திகள்

நடிகையிடம் பணம் கேட்டு மிரட்டல் + "||" + Threatening the actress to ask for money

நடிகையிடம் பணம் கேட்டு மிரட்டல்

நடிகையிடம் பணம் கேட்டு மிரட்டல்
இந்தி நடிகை பூஜா பெடியிடம் மர்ம நபர்கள் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.
இந்தி திரையுலகின் முன்னாள் கதாநாயகி பூஜா பெடி. தற்போது குணச்சித்திர வேடங்களில் நடிக்கிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். கோவாவில் வசித்து வரும் பூஜா பெடி தனது கணவருடன் இணைந்து சொந்தமாக தொழில் செய்கிறார். இவரது வர்த்தக இணையதளத்தை முடக்கிய மர்ம நபர்கள், அவரிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.

இதுகுறித்து கோவா போலீஸ் டி.ஜி.பி.க்கு பூஜா பெடி புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், “எனது வர்த்தக இணைய தளத்தை ஹேக்கர்கள் முடக்கி பணம் கேட்டு மிரட்டுகிறார்கள். பணம் கொடுக்காவிட்டால் அந்த தளத்தை போதைபொருள் விற்பனைக்கு பயன்படுத்துவோம் என்றும் அச்சுறுத்துகிறார்கள்.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை” என்று குறிப்பிட்டு உள்ளார். மேலும் அவர் கூறுகையில், ‘எனது நிறுவனத்தை ஹேக்கர்கள் ஏற்கனவே ஒரு முறை முடக்கி உள்ளனர்’ என்றார்.