சினிமா செய்திகள்

தொழில் அதிபருடன் 30-ந்தேதி திருமணம் காஜல் அகர்வால் அறிக்கை + "||" + Kajal Agarwal's marriage to a businessman

தொழில் அதிபருடன் 30-ந்தேதி திருமணம் காஜல் அகர்வால் அறிக்கை

தொழில் அதிபருடன் 30-ந்தேதி திருமணம் காஜல் அகர்வால் அறிக்கை
தொழில் அதிபருடன் 30-ந்தேதி திருமணம் என நடிகை காஜல் அகர்வால் அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வாலுக்கும் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவுக்கும் திருமணம் முடிவாகி உள்ளது. இதனை காஜல் அகர்வாலே உறுதிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து காஜல் அகர்வால் நேற்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“எனக்கும் கவுதம் கிச்சலுக்கும் வருகிற 30-ந்தேதி மும்பையில் திருமணம் நடக்க உள்ளது. குடும்பத்தினர் மத்தியில் எளிமையாக இந்த திருமணம் நடக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கொரோனா நோய் தொற்று காலம் எங்கள் மகிழ்ச்சியில் மெல்லிய ஒளியை பாய்ச்சி உள்ளது. நாங்கள் இருவரும் இணைந்து எங்கள் வாழ்க்கையை தொடங்க இருக்கிறோம். இது உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதை அறிவோம். இத்தனை ஆண்டுகளாக நீங்கள் கொடுத்த அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. வாழ்க்கையில் புதிய பயணத்தை தொடங்குகிறோம். இதற்கு உங்கள் ஆசிர்வாதத்தை வேண்டுகிறோம். புதிய தேவை மற்றும் அர்த்தங்களோடு நான் தொடர்ந்து என்னுடைய ரசிகர்களை மகிழ்விப்பேன். உங்களின் முடிவில்லா ஆதரவுக்கு நன்றி.”  இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

திருமணம் செய்துகொள்ள போகும் காஜல் அகர்வாலுக்கு, நடிகர், நடிகைகளும், ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் வாழ்த்துகளை பதிவு செய்து வருகிறார்கள். காஜல் அகர்வால் தற்போது கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 மற்றும் தெலுங்கில் சிரஞ்சீவியின் ஆச்சார்யா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. கரும்பு விவசாயிகளுக்கு ரூ.24 கோடி நிலுவைத்தொகை பிரச்சினை: சர்க்கரை ஆலை மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு அறிக்கை
கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய ரூ.24 கோடி நிலுவைத்தொகைக்காக சர்க்கரை ஆலை மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு அறிக்கை அனுப்பி இருப்பதாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் சமீரன் தெரிவித்தார்.
2. விசைத்தறிக்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் தி.மு.க. தேர்தல் அறிக்கை குழுவிடம் மனு
விசைத்தறிக்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கை குழுவிடம் விசைத்தறியாளர்கள் மனு கொடுத்தனர்.
3. காங்கிரசில் இருந்து விலகி கட்சி மாற திட்டமா? அமைச்சர் நமச்சிவாயம் பரபரப்பு அறிக்கை
காங்கிரசில் இருந்து விலகி கட்சி மாற திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவியதையடுத்து அமைச்சர் நமச் சிவாயம் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
4. காஜல் அகர்வாலுக்கு திருமண நிச்சயதார்த்தம்? - ரகசியமாக நடந்ததாக பரபரப்பு
காஜல் அகர்வாலுக்கு ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது.
5. பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது; தனியார் மருத்துவமனை அறிக்கை
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது என தனியார் மருத்துவமனை அறிக்கை தெரிவிக்கின்றது.