சினிமா செய்திகள்

கொரோனா பரவல் மீண்டும் தள்ளிப்போகும் ரஜினி படப்பிடிப்பு? + "||" + Rajini shooting to postpone corona spread again?

கொரோனா பரவல் மீண்டும் தள்ளிப்போகும் ரஜினி படப்பிடிப்பு?

கொரோனா பரவல் மீண்டும் தள்ளிப்போகும் ரஜினி படப்பிடிப்பு?
ரஜினிகாந்தின் அண்ணாத்த படப்பிடிப்பை கொரோனா பரவலுக்கு முன்பே ஐதராபாத்தில் தொடங்கி பாதி முடித்து விட்டனர்.
ரஜினிகாந்தின் அண்ணாத்த படப்பிடிப்பை கொரோனா பரவலுக்கு முன்பே ஐதராபாத்தில் தொடங்கி பாதி முடித்து விட்டனர். தற்போது ஊரடங்கை தளர்த்தி படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கி உள்ளதால் மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பை இந்த மாதம் தொடங்கும் முடிவில் இருந்தனர். இதற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்தன. பிற நடிகர், நடிகைகளும் படப்பிடிப்புக்கு செல்ல தயாராக இருந்தார்கள்.

இந்த நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பை மீண்டும் தள்ளி வைத்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. படப்பிடிப்பில் அரசு குறிப்பிட்ட எண்ணிக்கையை விட அதிகமானோர் பணியாற்ற வேண்டி இருப்பதாக கூறப்படுகிறது. கொரோனா பரவல் அடங்காமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தெலுங்கு, இந்தி படப்பிடிப்புகளில் பங்கேற்ற நடிகர் நடிகைகள் கொரோனா தொற்றில் சிக்கி உள்ளனர். இதுபோன்ற காரணங்களாலும் ரஜினிகாந்த் உள்ளிட்ட அண்ணாத்த படத்தில் நடிக்கும் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் பாதுகாப்பை கருதியும் படப்பிடிப்பை தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. கொரோனாவால் அண்ணாத்த படத்தை கைவிட்டு விட்டதாக ஏற்கனவே வெளியான தகவலை படக்குழுவினர் மறுத்தனர். படத்தை பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் ஐஸ்வர்யா ராய்: 10 மாதங்களுக்கு பிறகு வெளியே வந்தார்
பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக நடிகை ஐஸ்வர்யா ராய், 10 மாதங்களுக்கு பிறகு வெளியே வந்தார்.
2. “அண்ணாத்த” படப்பிடிப்பு ஜனவரி 10ம் தேதிக்குள் நிறைவடையும் - நடிகர் ரஜினிகாந்த்
ஹைதராபாத்தில் நடைபெறும் அண்ணாத்த படப்பிடிப்பு வரும் ஜனவரி 10ம் தேதிக்குள் நிறைவடையும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
3. திருக்கழுக்குன்றம் அருகே ஊரடங்கு நேரத்தில் தொலைக்காட்சி படப்பிடிப்பு நடத்தியதால் பரபரப்பு
திருக்கழுக்குன்றம் அருகே ஊரடங்கு நேரத்தில் தொலைக்காட்சி படப்பிடிப்பு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.