சினிமா செய்திகள்

நடிகர்களுக்கு ரசிகர்களே பலம் - நடிகை ராஷ்மிகா + "||" + Fans are the strength for actors - Actress Rashmika

நடிகர்களுக்கு ரசிகர்களே பலம் - நடிகை ராஷ்மிகா

நடிகர்களுக்கு ரசிகர்களே பலம் - நடிகை ராஷ்மிகா
நடிகர்களுக்கு ரசிகர்களே பலம் என்று நடிகை ராஷ்மிகா கூறியுள்ளார்.
கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

“நடிகர்களுக்கு ரசிகர்கள்தான் பலம். எவ்வளவு நன்றாக நடித்தாலும் ரசிகர்கள் பலம் இருந்தால்தான் ஆதரவு மேலும் கிடைக்கும். புதிய படங்கள் ரிலீசாகும் போதெல்லாம் தியேட்டர்களில் பேனர் கட்டுவது, கொடி தோரணங்கள் அமைப்பது எல்லாமே ரசிகர்கள்தான். ரசிகர்கள் இல்லாமல் உயர முடியாது என்று நடிகர்கள் உணர்ந்துள்ளனர். அதனால்தான் ஒவ்வொரு நடிகரும் ரசிகர் மன்றம் வைத்து ரசிகர்களை கவரவிக்கிறார்கள். நானும் ரசிகர்களுக்கு பெரிய மரியாதை கொடுக்கிறேன்.


என் வாழ்க்கையில் எதிர்கொண்ட பல பிரச்சினைகளில் இருந்து ரசிகர்கள் ஆதரவால்தான் மீண்டு இந்த நிலைக்கு வந்து இருக்கிறேன். ரசிகர்கள்தான் எனது பலம். கொரோனா ஊரடங்கு காலத்தில் ரசிகர்களோடு அதிக நேரத்தை கழிக்க வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் நிறைய ஆலோசனைகள் கொடுத்தனர். அது எனக்கு உபயோகமாக இருந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு படப்பிடிப்பில் மீண்டும் பங்கேற்க தயாராகி வருகிறேன்.“

இவ்வாறு ராஷ்மிகா கூறினார்.