சினிமா செய்திகள்

‘அவள் அப்படித்தான்’ படத்துக்காக ‘சில்க்’ சுமிதா வேடத்தில் நடிக்க படையெடுக்கும் புதுமுகங்கள் + "||" + Newcomers invading to play the role of ‘Silk’ Sumita

‘அவள் அப்படித்தான்’ படத்துக்காக ‘சில்க்’ சுமிதா வேடத்தில் நடிக்க படையெடுக்கும் புதுமுகங்கள்

‘அவள் அப்படித்தான்’ படத்துக்காக ‘சில்க்’ சுமிதா வேடத்தில் நடிக்க படையெடுக்கும் புதுமுகங்கள்
சித்ரா லட்சுமணன், தயாரிப்பாளர் எச்.முரளியுடன் இணைந்து, மறைந்த கவர்ச்சி நடிகை ‘சில்க்’ சுமிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கிறார்.

டைரக்டர், நடிகர், மற்றும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன், தயாரிப்பாளர் எச்.முரளியுடன் இணைந்து, மறைந்த கவர்ச்சி நடிகை ‘சில்க்’ சுமிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கிறார்.

இந்த படத்தை ‘மண்வாசனை’, ‘ஜல்லிக்கட்டு’ ஆகிய வெற்றி படங்களை தயாரித்த காயத்ரி பிலிம்ஸ், ‘அவ்வை சண்முகி’ படத்தை தயாரித்த முரளி சினி ஆர்ட்ஸ் ஆகிய 2 பட நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன. படத்துக்கு, ‘அவள் அப்படித்தான்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.


ஏராளமான விளம்பர படங்களை இயக்கியவரும், சந்தானம் கதாநாயகனாக நடித்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்ற படத்தை இயக்கியவருமான மணிகண்டன் இந்த படத்தை இயக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார்.

“சில்க் சுமிதாவின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணங்கள், இரண்டு. ஒன்று, வசீகரமான அவருடைய உடற்கட்டு; இரண்டாவது அவருடைய மயக்கும் கண்கள். எனவே ‘சில்க்’ சுமிதாவாக நடிக்க இருக்கும் நடிகைக்கு இந்த 2 அம்சங்களும் முக்கியமாக இருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்” என்கிறார், டைரக்டர் மணிகண்டன். இவர் மேலும் கூறுகிறார்:

“அவள் அப்படித்தான் படத்தை பற்றி கேள்விப்பட்டு, ‘சில்க்’ சுமிதா வேடத்தில் நடிக்க பல புதுமுகங்கள் படையெடுக்க தொடங்கி விட்டார்கள். இதற்கான தேர்வு ஒன்றை நடத்த இருக்கிறோம். அதில் வெற்றி பெறுபவரே ‘சில்க்’ சுமிதாவாக நடிப்பார். படப்பிடிப்பை அடுத்த மாதம் (நவம்பர்) தொடங்க இருக்கிறோம்.”