சினிமா செய்திகள்

பிரபல கன்னட டைரக்டர் மரணம் + "||" + Death of famous Kannada director

பிரபல கன்னட டைரக்டர் மரணம்

பிரபல கன்னட டைரக்டர் மரணம்
பிரபல கன்னட டைரக்டர் விஜய் ரெட்டி குடும்பத்துடன் சென்னை கே.கே.நகரில் வசித்து வந்தார்.
பிரபல கன்னட டைரக்டர் விஜய் ரெட்டி குடும்பத்துடன் சென்னை கே.கே.நகரில் வசித்து வந்தார். அவருக்கு வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 84.

விஜய் ரெட்டி 40-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ளார். ஆரம்பத்தில் விட்டலாச்சாரியாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். 1970-ல் வெளியான ரங்கமஹால் ரகசியா என்ற கன்னட படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். கன்னட நடிகர் ராஜ்குமாரின் 150-வது படமான கந்தடா குடி படத்தை இயக்கி உள்ளார். தொடர்ந்து ராஜ்குமார் நடித்த மயூரா என்ற வரலாற்று படத்தையும் இயக்கினார். விஜய்ரெட்டி இயக்கத்தில் ராஜ்குமார், ஜெயப்பிரதா நடித்த, சன்னாடி அப்பன்ன, படம் பெரிய வெற்றி பெற்றது. மேலும் முன்னணி கன்னட நடிகரான விஷ்ணுவர்த்தன் நடித்த பல படங்களை இயக்கி உள்ளார்.