சினிமா செய்திகள்

கவிஞர் வைரமுத்து வேதனை + "||" + The pain of the poet Vairamuthu

கவிஞர் வைரமுத்து வேதனை

கவிஞர் வைரமுத்து வேதனை
ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்ட சம்பவத்துக்கு கவிஞர் வைரமுத்து தனது எதிர்ப்பையும், வேதனையையும் வெளிப்படுத்தி உள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்குத்திட்டை ஊராட்சி மன்ற கூட்டத்தில் பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்ட சம்பவத்துக்கு கவிஞர் வைரமுத்து தனது எதிர்ப்பையும், வேதனையையும் வெளிப்படுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

பட்டியலினத்துத் தாயொருத்தி தரையில் வீசப்படுவதா? அவரென்ன மண்புழுவா? தலைவியாய்க் கூட அல்ல... மனுஷியாய் மதிக்க வேண்டாமா? என் வெட்கத்தில் துக்கம் குமிழியிடுகிறது.

தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க வேண்டிய துயரங்களுள் இதுவும் ஒன்று.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.