சினிமா செய்திகள்

விமான விபத்தில் இறந்த சவுந்தர்யா வாழ்க்கை கதையில் சாய்பல்லவி? + "||" + Saipallavi in the life story of Saundarya who died in a plane crash?

விமான விபத்தில் இறந்த சவுந்தர்யா வாழ்க்கை கதையில் சாய்பல்லவி?

விமான விபத்தில் இறந்த சவுந்தர்யா வாழ்க்கை கதையில் சாய்பல்லவி?
விமான விபத்தில் இறந்த நடிகை சவுந்தர்யாவின் வாழ்க்கை சினிமா படமாகிறது.
விமான விபத்தில் இறந்த நடிகை சவுந்தர்யாவின் வாழ்க்கை சினிமா படமாகிறது. இவர் கார்த்திக் ஜோடியாக பொன்னுமணி படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து ரஜினிகாந்துடன் அருணாசலம், படையப்பா, சத்யராஜின் சேனாதிபதி, கமல்ஹாசனுடன் காதலா காதலா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தியில் அமிதாப்பச்சனுடன் இணைந்தும் நடித்து இருக்கிறார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்துள்ளார். 2004-ம் ஆண்டு பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்ய விமானத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார். இது பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது அவரது வாழ்க்கையை படமாக்கும் ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்த படத்தில் சவுந்தர்யா கதாபாத்திரத்தில் நடிக்க சாய்பல்லவியிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே நடிகை சாவித்திரி வாழ்க்கை சினிமா படமாக வெளிவந்தது. அதில் சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேசுக்கு தேசிய விருது கிடைத்தது. தற்போது ஜெயலலிதா வாழ்க்கை தலைவி என்ற பெயரில் சினிமா படமாக தயாராகிறது. இதில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் அரவிந்தசாமியும் நடிக்கின்றனர்.