சினிமா செய்திகள்

ரூ.2 கோடி கார் வாங்கிய நடிகை நஸ்ரியாவை விமர்சித்த ரசிகர்கள் + "||" + Fans criticize actress Nazriya for buying a car worth Rs 2 crore

ரூ.2 கோடி கார் வாங்கிய நடிகை நஸ்ரியாவை விமர்சித்த ரசிகர்கள்

ரூ.2 கோடி கார் வாங்கிய நடிகை நஸ்ரியாவை விமர்சித்த ரசிகர்கள்
தமிழில் நேரம் படம் மூலம் அறிமுகமானவர் நஸ்ரியா.
தமிழில் நேரம் படம் மூலம் அறிமுகமானவர் நஸ்ரியா. தொடர்ந்து ராஜா ராணி, நய்யாண்டி, வாயை மூடி பேசவும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் அதிக படங்களில் வந்தார். இவருக்கும் பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலுக்கும் காதல் மலர்ந்து 2014-ல் திருமணம் செய்து கொண்டனர். பகத் பாசில் தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

நஸ்ரியாவும், பகத் பாசிலும் சுமார் ரூ.2 கோடி மதிப்புள்ள ‘போர்ஷே 911’ மாடல் சொகுசு காரை சில தினங்களுக்கு முன்பு விலைக்கு வாங்கி அந்த புகைப்படத்தை வலைத்தளத்தில் வெளியிட்டனர். இதற்காக பலரும் சமூக வலைத்தளத்தில் வாழ்த்தினர். ஆனால் சிலர் கொரோனா தொற்றினால் மக்கள் கஷ்டப்படும் நேரத்தில் உங்களுக்கு ரூ.2 கோடி கார் தேவையா? அந்த பணத்தை கஷ்டப்படும் ஏழைகளுக்கு கொடுத்து இருக்கலாமே என்று கண்டித்தும் விமர்சித்தும் கருத்து பதிவிட்டனர். இது பரபரப்பானது. எதிர்த்தவர்களுக்கு நடிகை சஹானா பதிலடி கொடுத்து வெளியிட்டுள்ள பதிவில், “பொறாமைக்காரர்கள் விஷம் கக்குகிறார்கள். அடுத்தவர்கள் வாழ்க்கையில் நன்மை நடந்தால் பொறாமைப்படுகின்றனர். மற்றவர்களுக்காக மகிழ்ச்சியை வெளிப்படுத்துங்கள்” என்று கூறியுள்ளார்.