சினிமா செய்திகள்

திகில் கதையில் ஜி.வி.பிரகாஷ் + "||" + GV Prakash in the horror story

திகில் கதையில் ஜி.வி.பிரகாஷ்

திகில் கதையில் ஜி.வி.பிரகாஷ்
ஜி.வி.பிரகாஷ் திகில் கதையம்சம் உள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்துக்கு அவரே இசையமைக்கவும் செய்கிறார்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள ஜெயில், ஆயிரம் ஜென்மங்கள், பேச்சிலர் ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளன. அடுத்து திகில் கதையம்சம் உள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்துக்கு அவரே இசையமைக்கவும் செய்கிறார்.

டி.வி. அகிலன் இயக்குகிறார். இவர் பல இயக்குனர்களிடம் உதவியாளராக பணியாற்றி குறும்படங்கள் இயக்கி உள்ளார். அவர் சொன்ன கதை ஜி.வி.பிரகாசுக்கு பிடித்துப்போனதால் உடனே நடிக்க சம்மதித்து உள்ளார். இஷானி சஜ்மி சலீம் தயாரிக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. கதாநாயகி உள்ளிட்ட இதர நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது. காதலை மையப்படுத்தி கிரைம் திரில்லர் படமாக தயாராகிறது.

இதன் படப்பிடிப்பு டிசம்பர் முதல் வாரத்தில் சென்னையில் தொடங்கி பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் நடக்க உள்ளது. 55 நாட்களில் முழு படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டு உள்ளனர். காதலை மையப்படுத்தி வெளியாகும் திகில் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது என்றும் அந்த வரிசையில் இந்த படமும் வெற்றிபெறும் என்றும் படக்குழுவினர் கூறினர்.

தொடர்புடைய செய்திகள்

1. விவசாயிகள் போராட்டம்: ஜி.வி.பிரகாஷ், சோனாக்சி ஆதரவு
விவசாயிகள் போராட்டத்திற்கு ஜி.வி.பிரகாஷ், சோனாக்சி ஆதரவு தெரிவித்துள்ளனர்.
2. ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுசின் 43-வது படம்
தனுஷ் ஏற்கனவே ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து இந்தியில் அந்த்ரங்கி ரே படத்தில் நடித்தார்.
3. ஜி.வி.பிரகாஷின் 3 படங்கள் ரிலீசுக்கு தயாரானது
ஜி.வி.பிரகாஷ் நடித்த 3 படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன.