சினிமா செய்திகள்

விஷாலுக்கு வில்லனாக ஆர்யா + "||" + Arya as the villain for Vishal

விஷாலுக்கு வில்லனாக ஆர்யா

விஷாலுக்கு வில்லனாக ஆர்யா
விஷால், சக்ரா படத்தில் நடித்து முடித்துள்ளார். கொரோனா பரவலுக்கு முன்பே இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்தது.
விஷால், சக்ரா படத்தில் நடித்து முடித்துள்ளார். கொரோனா பரவலுக்கு முன்பே இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்தது. விடுபட்ட சில காட்சிகளை தற்போது படமாக்கி உள்ளனர். இதற்காக 6 நாட்கள் படப்பிடிப்பை விஷால் செலவை குறைத்து சிக்கனமாக நடத்தி முடித்துள்ளார். இதற்கு முன்பு ஒரு நாள் படப்பிடிப்புக்கு ரூ.7 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை செலவு ஆனதாகவும் ஆனால் சிக்கன நடவடிக்கை மூலம் 6 நாட்கள் படப்பிடிப்பிலும் ஒரு நாளைக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்துக்கு உள்ளேயே செலவாகி இருப்பதாகவும் இதன் மூலம் ரூ.30 லட்சம் வரை மிச்சப்படுத்தி இருப்பதாகவும் விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. செலவை மிச்சப்படுத்தியது எப்படி? என்பதை விளக்கியும், மற்ற படங்களுக்கும் இதுபோல் சிக்கன நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தியும் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதிராஜாவுக்கு விஷால் கடிதம் எழுத இருப்பதாகவும் தெரிவித்தனர்.

அடுத்து ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் நடிக்கிறார். இதில் கதாநாயகியாக மிருனாளினியை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்தில் ஆர்யாவும் நடிக்கிறார். விஷாலுக்கு வில்லனாக அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க உள்ளது.