சினிமா செய்திகள்

பார்வதி புகாருக்கு நடிகர் விளக்கம் + "||" + Actor's explanation for Parvathi's complaint

பார்வதி புகாருக்கு நடிகர் விளக்கம்

பார்வதி புகாருக்கு நடிகர் விளக்கம்
நடிகை பார்வதி புகாருக்கு நடிகர் விளக்கம் அளித்துள்ளார்.

மலையாள நடிகர் சங்கத்துக்கு நிதி திரட்ட ‘டுவெண்டி 20’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கின்றனர். முதல் பாகத்தில் நடித்த பாவானா 2-ம் பாகத்தில் இல்லை என்று கூறிய சங்கத்தின் செயலாளர் இடைவேளை பாபுவை கண்டித்து சங்கத்தில் இருந்து நடிகை பார்வதி ராஜினாமா செய்தார். இவர் தமிழில் பூ, மரியான், உத்தமவில்லன், பெங்களூர் நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

பார்வதி கூறும்போது, “இடைவேளை பாபு, நடிகர் சங்கம் கைவிட்ட ஒரு பெண் உறுப்பினரை இறந்தவருடன் ஒப்பிட்டு பேசி இருப்பது மோசமான செயல். எனவே சங்கத்தில் இருந்து விலகுகிறேன்” என்றார். பார்வதி புகாருக்கு நடிகர் இடைவேளை பாபு அளித்துள்ள விளக்கத்தில், “நான் பேசியதை திரித்து வேறு கண்ணோட்டத்தில் பார்வதி பார்க்கிறார். ‘டுவெண்டி 20’ படத்தின் அடுத்த பாகத்தில் பாதிக்கப்பட்ட அந்த நடிகை நடிப்பாரா என்று என்னிடம் கேட்டனர். படத்தின் முதல் பாகத்தில் அந்த நடிகை இறந்து போவதுபோல் காட்சி உள்ளது. அவரால் மீண்டும் எப்படி நடிக்க முடியும் என்ற கருத்தில்தான் பேசினேன். இதற்கு வேறு அர்த்தம் எடுத்தால் நான் என்ன செய்வது” என்றார். இவர்கள் மோதல் பரபரப்பாகி உள்ளது.