சினிமா செய்திகள்

பெட்ரிக் இயக்கத்தில் ‘அந்தாதூன்’ ரீமேக் படத்தில் பிரசாந்த் + "||" + Prasanth in the remake of ‘Andathoon’ directed by Patrick

பெட்ரிக் இயக்கத்தில் ‘அந்தாதூன்’ ரீமேக் படத்தில் பிரசாந்த்

பெட்ரிக் இயக்கத்தில் ‘அந்தாதூன்’ ரீமேக் படத்தில் பிரசாந்த்
பெட்ரிக் இயக்கத்தில் ‘அந்தாதூன்’ ரீமேக் படத்தில் நடிகர் பிரசாந்த் நடிக்க உள்ளார்.

இந்தியில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மன் குரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்த அந்தாதூன் படம் 2018-ல் திரைக்கு வந்து பெரிய வெற்றி பெற்றது. ரூ.40 கோடி செலவில் எடுத்த இந்த படம் உலக அளவில் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் குவித்தது. சிறந்த இந்தி படம் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதையும் பெற்றது.

இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கடும் போட்டிகளுக்கு மத்தியில் நடிகர் தியாகராஜன் வாங்கினார். இதில் ஆயுஷ்மன் கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடிக்கிறார். இந்த படத்தை மோகன்ராஜா இயக்குவார் என்று கூறப்பட்டது. தற்போது அவருக்கு பதிலாக ஜெ.ஜே. பெட்ரிக் இயக்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இவர் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கியவர். அதில் தியாகராஜனும் நடித்து இருந்தார். பிரசாந்த் ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷ், சாய்பல்லவி உள்ளிட்ட முன்னணி இளம் கதாநாயகிகளை பரிசீலிப்பதாக தகவல் கசிந்துள்ளது. தபு கதாபாத்திரத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராய், ஷில்பா ஷெட்டி ஆகியோரிடம் பேச முடிவு செய்துள்ளனர். படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது.