சினிமா செய்திகள்

கொரோனாவை எதிர்கொள்ள நடிகர் சத்யராஜ் மகள் திவ்யாவின் புதிய இயக்கம் + "||" + Actor Sathyaraj's daughter Divya's new movement to face Corona

கொரோனாவை எதிர்கொள்ள நடிகர் சத்யராஜ் மகள் திவ்யாவின் புதிய இயக்கம்

கொரோனாவை எதிர்கொள்ள நடிகர் சத்யராஜ் மகள் திவ்யாவின் புதிய இயக்கம்
கொரோனாவை எதிர்கொள்ள நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா புதிய இயக்கம் ஒன்றை தொடங்கி உள்ளார்.

நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா பிரபல ஊட்டச்சத்து நிபுணராக இருக்கிறார். சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். கொரோனாவை ஊட்டச்சத்து உணவு மூலம் எதிர்கொள்ள புதிய இயக்கத்தையும் தொடங்கி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“இந்தியாவில் ஒரு ஆண்டில் பத்து மில்லியன் திருமணங்கள் நடக்கின்றன. அந்த திருமணங்களில் பரிமாறப்படும் 30 சதவீத உணவுகள் வீணாகின்றன. உணவும் ஊட்டச்சத்தும் வசதி உள்ளவர்களுக்கு மட்டும்தான் என்பது நியாயம் இல்லை. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினரும் குழந்தைகளும் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டுமானால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவு தேவை. இதற்காக மகிழ்மதி இயக்கத்தை ஆரம்பித்துள்ளேன். இது அரசியல் கட்சியோ சாதிமதம் சார்ந்த அமைப்போ கிடையாது. வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் பகுதிகளில் ஊட்டச்சத்து நிறைந்த உணவை இலவசமாக வழங்க உருவாக்கப்பட்ட இயக்கம். இதன் மூலம் தரமான உணவு வழங்குகிறோம். கொரோனா காலத்தில் மட்டும் இல்லாமல் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை இந்த இயக்கம் வழங்கும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. குடவாசல் ஒன்றியத்தில் 14 பேருக்கு கொரோனா சுகாதார பணிகள் தீவிரம்
குடவாசல் ஒன்றியத்தில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால் சுகாதார பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
2. நெல்லையில் கொரோனாவுக்கு பெண் பலி தென்காசி-தூத்துக்குடியில் 15 பேருக்கு தொற்று
நெல்லையில் கொரோனாவுக்கு பெண் பலியானார். மேலும் தென்காசி-தூத்துக்குடியில் 15 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
3. நெல்லையில் கொரோனாவுக்கு பெண் பலி தென்காசி-தூத்துக்குடியில் 15 பேருக்கு தொற்று
நெல்லையில் கொரோனாவுக்கு பெண் பலியானார். மேலும் தென்காசி-தூத்துக்குடியில் 15 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
4. நெல்லையில் கொரோனாவுக்கு பெண் பலி தென்காசி-தூத்துக்குடியில் 15 பேருக்கு தொற்று
நெல்லையில் கொரோனாவுக்கு பெண் பலியானார். மேலும் தென்காசி-தூத்துக்குடியில் 15 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
5. இந்தியாவில் உருமாறிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 150 ஆக உயர்வு
இந்தியாவில் உருமாறிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 150 ஆக உயர்வடைந்து உள்ளது.