சினிமா செய்திகள்

800 திரைப்படத்தில் நடிப்பதா? வேண்டாமா? விஜய்சேதுபதி ஓரிரு நாளில் முடிவை அறிவிக்கிறார் என தகவல் + "||" + 800 starring in a movie? Don't you VijaySethupathi

800 திரைப்படத்தில் நடிப்பதா? வேண்டாமா? விஜய்சேதுபதி ஓரிரு நாளில் முடிவை அறிவிக்கிறார் என தகவல்

800 திரைப்படத்தில் நடிப்பதா? வேண்டாமா? விஜய்சேதுபதி ஓரிரு நாளில் முடிவை அறிவிக்கிறார் என தகவல்
முத்தையா முரளிதரன் குறித்த ‘800’ படத்தில் இருந்து விலகுவதா? இல்லையா? என்பது பற்றி ஓரிரு நாளில் தனது முடிவை நடிகர் விஜய் சேதுபதி அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பற்கு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்,  முத்தையா முரளிதரன் குறித்த 800 படத்தில் இருந்து விலகுவதா? இல்லையா? என்பது பற்றி ஒரிரு நாளில் ஆலோசித்து தனது முடிவை விஜய்சேதுபதி அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

800 திரைப்படத்தில் முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிக்க எதிர்ப்பு எழுந்துள்ளதால் நடிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து விஜய்சேதுபதி ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

படத்தில் நடிக்கும் முடிவை கைவிட இயக்குனர் பாரதிராஜா,வைரமுத்து, சேரன் பாடலாசிரியர் தாமரை உள்ளிட்டோர் கோரிக்கை வைத்திருந்தனர்.

ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்களுக்கு முத்தையா முரளிதரன் ஆதரவளித்ததால் படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலக தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

படத்தில் அரசியல் சார்ந்த காட்சிகள் இல்லை என 800 படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே உறுதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.