சினிமா செய்திகள்

அதிரடி கதாநாயகியாக உருவாகும் கங்கனா ரனாவத்; தீவிர சண்டை பயிற்சி + "||" + I have started action training for my upcoming action films- Kangana Ranaut

அதிரடி கதாநாயகியாக உருவாகும் கங்கனா ரனாவத்; தீவிர சண்டை பயிற்சி

அதிரடி கதாநாயகியாக உருவாகும் கங்கனா ரனாவத்; தீவிர சண்டை பயிற்சி
அடுத்தடுத்து நடிக்கும் 2 ஆக்சன் திரைப்படங்களுக்காக தீவிர சண்டை பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீடியோவை நடிகை கங்கனா ரனாவத் வெளியிட்டுள்ளார்.
புதுடெல்லி

நடிகை கங்கனா ரனாவத் மும்பை  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் உள்ளது எனக்கூறி மராட்டிய மாநில ஆளும் கட்சியின் எதிர்ப்பை சம்பாதித்தார். அவரது அலுவலகம் இடிக்கப்பட்டது.அதிலவர் சட்டப்படி போராடி தடை வாங்கினார்.

தொடர்ந்து அவருக்கு எதிர்ப்பு வரவே அவர் மும்பையை விட்டு வெளியேறினார். இருந்தாலும் மராட்டிய மாநில அரசுக்கு எதிராக டுவிட்டரில் அடிக்கடி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.  

தற்போது அடுத்தடுத்து நடிக்கும் 2 ஆக்சன் திரைப்படங்களுக்காக தீவிர சண்டை பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீடியோவை நடிகை கங்கனா ரனாவத் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

சர்வேஷ் மேவரா இயக்கும் தேஜஸ் திரைப்படத்தில் விமானப்படை விமானியாகவும், ரஸ்னீஷ் ராஸி காய் இயக்கும் தக்காட் படத்தில் உளவாளியாகவும் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார்.

இந்த நிலையில், மணிகர்னிகா திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு, பாலிவுட்டுக்கான முதல் அதிரடி ஹீரோயினை தான் கொடுக்க உள்ளதாக டுவீட் செய்துள்ள கங்கனா, பயிற்சியாளர் ஒருவருடன் சண்டை பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீயின் மகன் டாக்டர். வெங்கடேஷ் கார்த்தி தற்கொலை
பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீயின் மகன் டாக்டர். வெங்கடேஷ் கார்த்தி பூர்விக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. கங்கனா ரனாவத், அவரது சகோதரிக்கு மும்பை போலீசார் சம்மன் விடுத்துள்ளதாக தகவல்
மும்பையை ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசியதால் கங்கனா ரனாவத்திற்கும் சிவசேனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
3. "எவனென்று நினைத்தாய்" கமல்ஹாசன் அடுத்த படம் குறித்த அறிவிப்பு, லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்
கமல்ஹாசன் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. படத்திற்கு "எவனென்று நினைத்தாய்" என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
4. கங்கானா ரனாவத்துக்கு பதில் அளித்த பாகிஸ்தான் பத்திரிகையாளருக்கு டுவிட்டரில் கடும் கண்டனம்
கங்கானா ரனாவத்துக்கு பதில் அளித்த பாகிஸ்தான் பத்திரிகையாளர் மெஹ்ர் தாரார் மீது டுவிட்டரில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.