சினிமா செய்திகள்

வலுக்கும் எதிர்ப்புகள்- முரளிதரன் படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகுவாரா? + "||" + In Tamil Nadu, row over Vijay Sethupathi playing Muttiah Muralitharan in 800

வலுக்கும் எதிர்ப்புகள்- முரளிதரன் படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகுவாரா?

வலுக்கும் எதிர்ப்புகள்- முரளிதரன் படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகுவாரா?
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து 800 என்ற பெயரில் தயாராகும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன

 இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து 800 என்ற பெயரில் தயாராகும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. ‘ஷேம் ஆன் விஜய் சேதுபதி’ என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது. டாக்டர் ராமதாஸ், வைகோ, சீமான், பாரதிராஜா, சீனுராமசாமி, சேரன், தாமரை உள்ளிட்ட பலர் 800 படத்தில் இருந்து விலகும்படி விஜய்சேதுபதியை வற்புறுத்தி உள்ளனர். 

கவிஞர் வைரமுத்து டுவிட்டரில், “கலையாளர் விஜய் சேதுபதிக்கு, சில நேரங்களில் செய்து எய்தும் புகழைவிட செய்யாமல் எய்தும் புகழே பெரிதினும் பெரிது செய்யும். நீங்கள் வளர்ந்து வருகிறீர்கள். வளர்பிறையில் கறை எதற்கு? இன உரிமைக்காக கலை உரிமையை விட்டு கொடுப்பதே விவேகம். நீங்கள் விவேகி” என்று என்று பதிவிட்டுள்ளார். 

இந்நிலையில் படத்தில், இளம் வயது முரளிதரனாக நடிக்க டி.ஜே அருணாச்சலம் மறுத்துள்ளார். இவர் அசுரன் படத்தில் தனுஷ் மகனாக நடித்தவர். அவர் கூறும்போது, “800 படத்தின் இயக்குனர் அழைத்து சிறுவயது முரளிதரனாக நடிக்கும்படி சொன்னார். படத்தில் ஈழத்தமிழரின் போர் விவரங்கள் இருக்கிறதா, இல்லையா என்பது தெரியவில்லை. 

ஆனால் என் அம்மா, ஈழத்தைச் சேர்ந்தவர். தமிழீழப் போரில் ஏராளமான கொடூரங்கள் நடந்தன. அதனால் இந்தப் படத்தால் நடிக்க மறுத்து விட்டேன்” என்றார். படத்தில் எதிர்ப்பை மீறி நடிப்பதா அல்லது விலகுவதா என்று நெருக்கமானவர்களுடன் விஜய்சேதுபதி ஆலோசிப்பதாகவும் இதுகுறித்து தனது இறுதிமுடிவை விரைவில் அறிவிப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. முத்தையா முரளிதரன் வாழ்க்கை திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்காமல் இருப்பது அவரது புகழுக்கு நல்லது-அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி
முத்தையா முரளிதரன் வாழக்கை திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்காமல் இருப்பது அவரது புகழுக்கு நல்லது என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
2. முத்தையா முரளிதரன் பயோபிக் படத்தில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதிக்கு வலுக்கும் எதிர்ப்பு
முத்தையா முரளிதரன் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 800 படத்துக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. முத்தையா முரளிதரன் பயோபிக்கைத் தவிர்க்கவும்எ ன்பாரதிராஜாவும், எட்டப்பன் ஆக வேண்டாம் என கவிஞர் தாமரையும் கூறி உள்ளனர்.
3. ‘மாஸ்டர்’ படத்தில் விஜய்-விஜய் சேதுபதி நடித்த மிரட்டலான காட்சிகள்
’மாஸ்டர்’ படத்தில் விஜய்-விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள், மிரட்டலாக அமைந்து இருப்பதாக கூறப்படுகிறது.
4. லாபம் படத்தில் புரட்சியாளராக விஜய் சேதுபதி
லாபம் படத்தில் விஜய் சேதுபதி கார்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக போராடும் புரட்சியாளராக வித்தியாசமான தோற்றத்தில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
5. இணைய தளத்தில் விஜய் சேதுபதி படம்?
இணைய தளத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் படம் வெளியாகிறதா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.