சினிமா செய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் விவேக் ஓபராயின் மனைவிக்கு போலீசார் மீண்டும் சம்மன் + "||" + In the case of drugs Actor Vivek Oberoi's wife summoned again by police

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் விவேக் ஓபராயின் மனைவிக்கு போலீசார் மீண்டும் சம்மன்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் விவேக் ஓபராயின் மனைவிக்கு போலீசார் மீண்டும் சம்மன்
போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் விவேக் ஓபராயின் மனைவி பிரியங்கா ஆல்வா விசாரணைக்கு ஆஜராகாததால் அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்ப பெங்களூரு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
பெங்களூரு

கன்னட திரையுலகினர் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போதைப்பொருள் பயன்படுத்தியது மற்றும் அந்த கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, அவர்களது நண்பர்கள்  உள்பட 14 பேர் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். 

கன்னட திரை உலகினருக்கு போதைப்பொருள் சப்ளை செய்த வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜீவராஜ் ஆல்வாவின் மகன் ஆதித்யா தலைமறைவாக உள்ளார். தனது சகோதரியும் பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராயின் மனைவியுமான பிரியங்கா வீட்டில் ஆதித்யா பதுங்கி இருக்கலாம் என்பதால், அங்கு சோதனையும் நடத்தப்பட்டது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி பிரியங்கா ஆல்வாவுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் அவர் நேற்று விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே, மீண்டும் சம்மன் அனுப்ப உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. போதைப்பொருள் விவகாரத்தில் நடிகை அனுஸ்ரீயை காப்பாற்ற முயன்ற முன்னாள் முதல்-மந்திரி யார்? அரசு பகிரங்கப்படுத்த குமாரசாமி வலியுறுத்தல்
போதைப்பொருள் விவகாரத்தில் நடிகை அனுஸ்ரீயை காப்பாற்ற முயன்ற முன்னாள் முதல்-மந்திரி யார்? என்பதை அரசு பகிரங்கப்படுத்த வேண்டும் என்று குமாரசாமி வலியுறுத்தி உள்ளார்.
2. போதைப்பொருள் விவகாரம் சூடுபிடிக்கிறது: பிரபல இந்தி நடிகைகளுக்கு சிக்கல் தீபிகா படுகோனேயிடம் 5 மணி நேரம் விசாரணை ஷரத்தா கபூர், சாரா அலிகானிடமும் கிடுக்கிப்பிடி
போதைப்பொருள் விவகாரம் சூடுபிடித்த நிலையில் பிரபல இந்தி நடிகைகளுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. நடிகைகள் தீபிகா படுகோனே, ஷரத்தா கபூர், சாரா அலிகானிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்தது.
3. போதைப்பொருள் விவகாரம்: 2 நடிகர்கள்-முன்னாள் கவுன்சிலர் போலீசார் முன்பு ஆஜர் 6 மணி நேரம் தீவிர விசாரணை
போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக 2 நடிகர்கள்- முன்னாள் கவுன்சிலர் ஆகியோர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜரானார்கள். அவர்கள் 3 பேரிடமும் 6 மணி நேரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
4. போதைப்பொருள் விவகாரம்: நடிகை அன்ட்ரிதா ராய்-கணவருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் நோட்டீசு விசாரணைக்கு இன்று ஆஜராக உத்தரவு
போதைப்பொருள் விவகாரத்தில் இன்று(புதன்கிழமை) விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகை அன்ட்ரிதா ராய் மற்றும் அவரது கணவரும், நடிகருமான திகந்த் ஆகியோருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் நோட்டீசு அனுப்பி உள்ளனர்.