சினிமா செய்திகள்

நடிகை கீர்த்தி சுரேஷ் பிறந்த நாள் - திரை பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து + "||" + Birthday of actress Keerthi Suresh

நடிகை கீர்த்தி சுரேஷ் பிறந்த நாள் - திரை பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து

நடிகை கீர்த்தி சுரேஷ் பிறந்த நாள் - திரை பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது 28ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.
சென்னை,

தமிழில் இது என்ன மாயம், ரஜினி முருகன், ரெமோ, தொடரி, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், நடிகையர் திலகம், சீமராஜா, சர்கார், சண்டகோழி-2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார் கீர்த்தி சுரேஷ். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். மகாநதி படத்தில் சாவித்ரி வேடத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். 

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது 28ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இவர் தற்போது இவர் ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.  கீர்த்தி சுரேஷ்க்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.