சினிமா செய்திகள்

"800" பட விவகாரம்; கலைத்துறையில் அரசியல் தலையீடு முறையற்றது: சரத்குமார் அறிக்கை + "||" + "800" image affair; Political interference in the arts is improper: Sarathkumar Report

"800" பட விவகாரம்; கலைத்துறையில் அரசியல் தலையீடு முறையற்றது: சரத்குமார் அறிக்கை

"800" பட விவகாரம்; கலைத்துறையில் அரசியல் தலையீடு முறையற்றது:  சரத்குமார் அறிக்கை
கலைத்துறையில் அரசியல் தலையீடு மற்றும் எதிர்ப்புகள் முறையற்றது என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை,

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில், கலைத்துறையின் ஊக்கத்தை தடுக்கின்ற முயற்சி ஏற்புடையதல்ல என்று சரத்குமார் கூறியுள்ளார்.

சாதாரண மனிதன் பல போராட்டங்களுக்கு பிறகு, எப்படி விளையாட்டு துறையில் உச்சநிலையை அடைந்தான் என்பதை சித்தரிக்கும் கதைக்களத்தை வரவேற்க வேண்டும்.  அரசியல் ரீதியாக அணுகி எதிர்ப்பு தெரிவிப்பது சரியாக இருக்காது என்று அவர் கூறியுள்ளார்.

இந்த கதாபாத்திரத்தில் தான் நடிக்க வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தால் கலை உலகம் முழு சுதந்திரத்துடன் செயல்பட முடியாத சூழல் உருவாகிவிடும் என்றும் சரத்குமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, படமானது தணிக்கை செய்யப்பட்ட பின்னரே வெளியாகும் என்றும், படைப்பாளிகளின் முயற்சியை தடுக்க வேண்டாம் என்றும் சரத்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். போட்டி அணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்; ராகுல் டிராவிட்
ஐ.பி.எல். போட்டிக்கான அணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
2. அரசியல் தலையீடு உள்ள வழக்குகளுக்கு மட்டுமே அரசு அவசரம் காட்டுகிறது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கண்டனம்
அரசியல் தலையீடு உள்ள வழக்குகளுக்கு மட்டுமே அரசு அவசரம் காட்டுவதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.
3. தோனி ஓர் அபாயகரமான வீரர்; ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அபாயகரமான வீரர் என்றால் அது தோனி தான் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
4. மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை விரைவுப்படுத்த வெங்கடேசன் எம்.பி. நாடாளுமன்றத்தில் வலியுறுத்தல்
மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும் என்று அத்தொகுதி எம்.பி. வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
5. ஜே.இ.இ. முதன்மை தேர்வு: விண்ணப்பித்த மாணவர்களில் 74 சதவீதம் பேர் எழுதினார்கள்; மத்திய மந்திரி தகவல்
ஜே.இ.இ. முதன்மை தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களில் 74 சதவீதம் பேர் தேர்வை எழுதியதாக மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.