சினிமா செய்திகள்

தெலுங்கு பட பிரபல நடிகர் ராஜசேகர், மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி + "||" + Telugu film star Rajasekar confirms wife's corona infection

தெலுங்கு பட பிரபல நடிகர் ராஜசேகர், மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தெலுங்கு பட பிரபல நடிகர் ராஜசேகர், மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தெலுங்கு படவுலகின் பிரபல நடிகர் ராஜசேகர், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
ஐதராபாத்,

தெலுங்கு படவுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் ராஜசேகர்.  இவரது மனைவி ஜீவிதா.  இவர் முன்னாள் நடிகையாவார்.

நடிகர் ராஜசேகர் புதிய படமொன்றின் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள தயாராகி வந்துள்ளார்.  ஆனால் கடந்த வாரம் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா பாதிப்புகளுக்கான அறிகுறிகள் தென்பட்டு உள்ளன.

இதனால் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.  அதன் முடிவில் அவர்கள் அனைவருக்கும் கொரோனா பாதிப்புகள் இருப்பது உறுதியானது.  இதனை தொடர்ந்து அவர்கள் தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நடிகர் ராஜசேகரின் மகள்களான நடிகைகள் சிவாத்மிகா ராஜசேகர் மற்றும் சிவானி ராஜசேகர் ஆகிய இருவரும் குணமடைந்து உள்ளனர்.

இதுபற்றி நடிகர் ராஜசேகர் வெளியிட்டு உள்ள டுவிட்டர் பதிவில், எனக்கும், ஜீவிதாவுக்கும் மற்றும் எங்களது குழந்தைகளுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.  மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளோம்.

எனது இரு குழந்தைகளும் குணமடைந்து விட்டனர்.  நானும் ஜீவிதாவும் நலமுடனே இருக்கிறோம்.  விரைவில் குணமடைந்து வீடு திரும்புவோம்.  நன்றி என தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க துணை ஜனாதிபதியின் அரசியல் ஆலோசகர் உள்பட 5 பேருக்கு கொரோனா பாதிப்பு
அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்சின் அரசியல் ஆலோசகர் உள்பட 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
2. போலந்து அதிபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
போலந்து நாட்டு அதிபர் ஆண்டிரெஜ் துதாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
3. பிரான்சில் தொடர்ந்து உயர்வு; 10 லட்சம் கடந்தது கொரோனா பாதிப்பு
பிரான்சில் தொடர்ந்து உயர்ந்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சம் கடந்துள்ளது.
4. கொரோனா பாதிப்பு: அமெரிக்காவில் வரும் பிப்ரிவரிக்குள் 5 லட்சம் பேர் பலியாக கூடும்; ஆய்வு முடிவு
அமெரிக்காவில் ஒவ்வொருவரும் முக கவசங்கள் அணிவதன் வழியே 1.3 லட்சம் உயிர்களை பாதுகாக்கலாம் என்று ஆய்வு முடிவு தெரிவித்து உள்ளது.
5. கொரோனா பாதிப்புகளால் மோசமடைந்து வருகிறது பாகிஸ்தான்
கொரோனா பாதிப்புகளால் பாகிஸ்தானின் நிலைமை மோசமடைந்து வருகிறது என அந்நாட்டு தேசிய ஆணை மற்றும் செயல் மையம் தெரிவித்து உள்ளது.