சினிமா செய்திகள்

‘சுல்தான்’ படக்குழுவினரிடம் கார்த்தி பிரியாவிடை- படப்பிடிப்பு முடிவடைந்தது + "||" + Karthi bids farewell to 'Sultan' crew Shooting is over

‘சுல்தான்’ படக்குழுவினரிடம் கார்த்தி பிரியாவிடை- படப்பிடிப்பு முடிவடைந்தது

‘சுல்தான்’ படக்குழுவினரிடம் கார்த்தி பிரியாவிடை- படப்பிடிப்பு முடிவடைந்தது
‘பருத்தி வீரன்‘ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான கார்த்தி, இதுவரை 19 படங்களில் நடித்து இருக்கிறார்.

‘பருத்தி வீரன்‘ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான கார்த்தி, இதுவரை 19 படங்களில் நடித்து இருக்கிறார். ஆயிரத்தில் ஒருவன், பையா, சிறுத்தை, நான் மகான் அல்ல, மெட்ராஸ், கொம்பன், காஸ்மோரா, கடைக்குட்டி சிங்கம், சகுனி, தீரன் அதிகாரம் ஒன்று, தம்பி, கைதி ஆகியவை கார்த்தி நடித்ததில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய படங்கள்.

அவருடைய 19-வது படமாக, ‘சுல்தான்‘ வரயிருக்கிறது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஸ்மிகா மந்தனா நடித்து இருக்கிறார். பாக்யராஜ் கண்ணன் டைரக்டு செய்திருக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. கடைசி நாள் படப்பிடிப்பில் சக நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களிடம் இருந்தும் கார்த்தி பிரியாவிடை பெற்றார்.

“சுல்தான் படத்தில் என்னுடன் நடித்த நடிகர்-நடிகைகளும், பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்களும் இன்முகத்துடன் ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார்கள். இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும். வெற்றி விழாவில் மீண்டும் சந்திப்போம்“ என்று கார்த்தி கூறினாராம்.


தொடர்புடைய செய்திகள்

1. 2 கதாநாயகிகளுடன் இரட்டை வேடங்களில் கார்த்தி
கார்த்தி கதாநாயகனாக நடிக்க, பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஒரு புதிய படம் தயாராகிறது. படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை. ‘இரும்புத்திரை,’ ‘ஹீரோ’ ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் டைரக்டு செய்கிறார்.
2. வைரலாகும் கார்த்தியின் சுல்தான் படத்தின் பர்ஸ்ட் லுக்
நடிகர் கார்த்தியின் சுல்தான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி உள்ளது.