சினிமா செய்திகள்

டைரக்டரான வரலட்சுமி சரத்குமார் + "||" + Director Varalakshmi Sarathkumar

டைரக்டரான வரலட்சுமி சரத்குமார்

டைரக்டரான வரலட்சுமி சரத்குமார்
டைரக்டர் ஆனார் வரலட்சுமி சரத்குமார்.

போடா போடி படத்தின் மூலம் நடிகையான வரலட்சுமி சரத்குமார், தொடர்ந்து தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சண்டக்கோழி-2, சர்கார் உள்ளிட்ட படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து கவனம் பெற்றார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். அடுத்து டைரக்டர் அவதாரம் எடுக்கிறார். 

கண்ணாமூச்சி என்ற படத்தை வரலட்சுமி சரத்குமார் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்துக்கு திரைக்கதை எழுதி முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். பழிவாங்கும் கதையம்சத்தில் தயாராகிறது. கண்ணாமூச்சி படத்தின் தலைப்பை நேற்று கனிமொழி எம்.பி, ராதிகா, குஷ்பு, சுகாசினி, ஹேமா ருக்மணி, ரேவதி, ஜோதிகா, சமந்தா, திரிஷா, சிம்ரன், சினேகா, தமன்னா, லட்சுமிராய், சாய்பல்லவி, ஆண்ட்ரியா, கீர்த்தி சுரேஷ், காஜல் அகர்வால், ரம்யா நம்பிசன் உள்ளிட்ட அரசியல் சமூக, திரைப்பட துறையை சேர்ந்த 50 பெண்கள் வெளியிட்டனர். இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் என்.ராமசாமி தயாரிக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. டைரக்டர் சாஜித் கான் மீது நடிகை பாலியல் புகார்
நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் மீ டூவில் தொடர்ந்து பாலியல் புகார் கூறி வருகிறார்கள்.
2. நடிகை அதுல்யாவுக்கு டைரக்டர் எதிர்ப்பு
தமிழில் ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், சுட்டுப்பிடிக்க உத்தரவு, கேப்மாரி, நாடோடிகள் 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அதுல்யா ரவி தற்போது என் பெயர் ஆனந்தன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.