சினிமா செய்திகள்

லோகேஷ் கனகராஜ் படத்தில் புதிய தோற்றத்தில் கமல்ஹாசன் + "||" + Kamal Haasan in new look in Lokesh Kanagaraj movie

லோகேஷ் கனகராஜ் படத்தில் புதிய தோற்றத்தில் கமல்ஹாசன்

லோகேஷ் கனகராஜ் படத்தில் புதிய தோற்றத்தில் கமல்ஹாசன்
லோகேஷ் கனகராஜ் படத்தில் புதிய தோற்றத்தில் கமல்ஹாசன் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கமல்ஹாசனின் இந்தியன்-2 படப்பிடிப்பு கொரோனா பரவலால் பல மாதங்களாக முடங்கி உள்ளது. தற்போது அவர் பிக்பாஸ் தொலைக்காட்சி தொடரை தொகுத்து வழங்கி வருகிறார். அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார். இது கமல்ஹாசனுக்கு 232-வது படமாகும். 

கதாநாயகி மற்றும் இதர நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது. லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே மாநகரம், கைதி ஆகிய படங்களை டைரக்டு செய்துள்ளார். விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கி முடித்துள்ளார். கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளது. படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. ஆனாலும் கமல் ரசிகர்கள் ‘எவனென்று நினைத்தாய்’ என்று பெயர் வைத்து டுவிட்டரில் ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்தனர். இந்த படத்தில் கமல்ஹாசன் வித்தியாசமான தோற்றத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அந்த தோற்றத்தை ரகசியமாக வைத்துள்ளனர். மேக்கப் கலைஞர்கள் அவரது தோற்றத்தை மாற்றி புகைப்படம் எடுக்கும் பணியை வடபழனியில் உள்ள ஸ்டூடியோவில் தொடங்கி உள்ளனர். இந்த தோற்றத்தை விரைவில் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.