பாரதிராஜா வற்புறுத்தல்: நடிகர்கள் சம்பளம் 30 சதவீதம் குறைப்பு


பாரதிராஜா வற்புறுத்தல்: நடிகர்கள் சம்பளம் 30 சதவீதம் குறைப்பு
x
தினத்தந்தி 20 Oct 2020 12:24 AM GMT (Updated: 20 Oct 2020 12:24 AM GMT)

நடிகர்கள் சம்பளம் 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன.



தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவரும், டைரக்டருமான பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“நடிகர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் ஓர் வேண்டுகோள். கொரோனாவுக்கு முன் தொடங்கி பாதியில் நிறுத்தி வைத்திருக்கும் எண்ணற்ற படங்களை முடித்து திரைக்கு கொண்டுவரும் வேலையை மீண்டும் தொடங்க வேண்டும். ஏற்கனவே பணம் பிறரிடம் வாங்கி முதலீடு போட்டதில் தேக்க நிலை. அதற்கான வட்டிப்பெருக்கம் இதெல்லாம் தயாரிப்பாளரின் மீது விழுந்திருக்கும் மீள முடியாத பெருஞ்சுமை. 

அதோடு மீதி படப்பிடிப்பையும் முடித்தாக வேண்டும். தயாரிப்பாளர்களுக்கு 50 சதவீதம் நஷ்டம் என்பது உறுதியாக தெரிகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் தயாரிப்பாளர்களுக்கு தோள் கொடுக்க வேண்டியது அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் கடமையல்லவா? எல்லோரையும் கேட்கவில்லை. ரூபாய் 10 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறைந்த பட்சம் தாங்கள் வாங்கும் சம்பளத்தில் 30 சதவீதத்தை விட்டுக்கொடுத்து, நிறுத்தி வைத்திருக்கும் படங்களை முடித்துதருமாறு வேண்டுகோள் வைக்கிறேன். இனி ஒப்பந்தம் செய்யும் படங்களுக்கு இந்த வேண்டுகோள் பொருந்தாது.”

இவ்வாறு பாரதிராஜா கூறியுள்ளார்.

Next Story