ஷாருக்கான், கஜோலுக்கு லண்டனில் சிலை


ஷாருக்கான், கஜோலுக்கு லண்டனில் சிலை
x
தினத்தந்தி 20 Oct 2020 11:34 PM GMT (Updated: 20 Oct 2020 11:34 PM GMT)

ஷாருக்கான், கஜோலுக்கு லண்டனில் வெண்கல சிலை நிறுவப்பட உள்ளது.


லண்டனில் உள்ள லெஸ்டர் கொயர் புகழ்பெற்ற சுற்றுலாதளமாகும். இங்கு சீன்ஸ் இன் தி ஸ்கொயர் என்ற பெயரில் பிரபல நடிகர்கள் மற்றும் கதாபாத்திரங்களின் சிலைகள் திரைப்பட காட்சிகள் இடம்பெற்று உள்ளன. 

ஹாரிபாட்டர், பேட்மேன், மிஸ்டர் பீன் உள்பட பல கதாபாத்திரங்களில் சிலைகள் இங்கு உள்ளன. இந்த வரிசையில் தில்வாலே துல்ஹனியா இந்தி படத்தில் நடித்த ஷாருக்கான், கஜோல் ஆகியோரின் கதாபாத்திரங்களின் வெண்கல சிலையும் நிறுவப்பட உள்ளது. இங்கு அமைக்கப்படும் முதல் இந்திய பட உலோக சிலை இதுதான். இந்த சிலையின் திறப்பு விழா அடுத்த வருடம் நடக்கிறது. இதில் ஷாருக்கானும், கஜோலும் கலந்து கொள்கிறார்கள். 

தில்வாலே துல்ஹனியா படம் வெளியாகி 25 வருடங்கள் ஆகின்றன. ரூ.4 கோடி செலவில் தயாரான இந்த படம் 102 கோடிக்கு மேல் வசூலித்தது. ஷோலே படம் மும்பையில் உள்ள மினர்வா தியேட்டரில் 5 ஆண்டுகள் ஓடியது. ஆனால் தில்வாலே படம் ஊரடங்கில் தியேட்டரை மூடியது வரை 25 ஆண்டுகளாக மும்பையில் உள்ள மராத்தா மந்திர் தியேட்டரில் தினமும் ஒரு காலை அல்லது பகல் காட்சியாக திரையிடப்பட்டு வந்தது.

Next Story