சினிமா செய்திகள்

எகிப்து அரசி கிளியோபாட்ரா கறுப்பழகியா...? வெள்ளையின நடிகை நடிக்க எதிர்ப்பு + "||" + Gal Gadot as Cleopatra in new movie about Egyptian queen is causing misplaced outrage

எகிப்து அரசி கிளியோபாட்ரா கறுப்பழகியா...? வெள்ளையின நடிகை நடிக்க எதிர்ப்பு

எகிப்து அரசி கிளியோபாட்ரா கறுப்பழகியா...? வெள்ளையின நடிகை நடிக்க எதிர்ப்பு
எகிப்து அரசி கிளியோபாட்ராவாக நடிப்பதற்கு எதற்கு வெள்ளையின நடிகை? கால் கேடட்டுக்கு எதிராக ஹாலிவுட்டில் புதிய சர்ச்சை எழுந்து உள்ளது.
வாஷிங்டன்

வரலாற்று பேரழகிகள் பட்டியலில் இன்றும் முதலிடத்தில் இருப்பவர் கிளியோபாட்ரா. கி.மு. 69-30 காலத்தில் வாழ்ந்தவர் கிளியோபாட்ரா.

கழுதைப்பாலில் குளிப்பார்..,

கண்களில் பல வண்ண மைகளால் அலங்காரம் செய்துகொள்வார்..

உடல் மினுமினுப்புக்காக முத்துக்களை வினிகரில் கரைத்து அருந்துவார்.. 

என பல கதைகள் அவளை பற்றி உலவுகின்றன. அவர் பேரழகி மட்டுமல்ல ஜூலியஸ் சீசர், மார்க் ஆன் டனி போன்ற மாவீரர்களின் காதல் மனைவியாகவும் இருந்தார். கிரேக்கம், ரோம், எகிப்து என பல நாடுகளின் வரலாறே அவரால் மாறியது என்றால் பார்த்து கொள்ளுங்களே. போராட்டங்களும், மர்மங்களும் நிரம்பிய அவளது வரலாற்றை இன்றும் பல மேற்கத்திய பல்கலைக்கழகங்கள் ஆராய்ந்து கொண்டிருக்கின்றன.

வாழ்நாள் முழுவதும் தன் அழகிய தோற்றம் மீது அக்கறை செலுத்தி வந்தார் கிளியோபாட்ரா சிகப்பழகி அல்ல கறுப்பழகி. 

கிளியோபாட்ராவின் வாழ்க்கை மீண்டும் படமாக்கப்ப்டுகிறது. கிளியோபாட்ராவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் 'வொண்டர் உமன்' படத்தின் முதன்மை கதாபாத்திரமாக கேல் கடோட் நடிப்பதற்கு ஹாலிவுட்டில் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆஸ்கேன்ஸாய் யூத பாரம்பர்யத்தை சேர்ந்த கேல் கடோட் எகிப்தியன் பேரழகியாக நடிப்பது, சிகப்பழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வழக்கமான தவறின் தொடர்ச்சியாக உள்ளது என்று எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

ஹாலிவுட், கிளியோபாட்ராவை வெள்ளை நிறத்தில் இருப்பவராக சித்தரிப்பதன் மூலம், வரலாற்றிற்கு வெள்ளையடிப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

வொண்டர் உமன் புகழ் ஹாலிவுட் நடிகை கால் கேடட் கிளியோபாட்ராவின் பயோபிக்கில் நடிக்கவுள்ளார். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'வொண்டர் வுமன்' கதாபாத்திரம் மூலம்  புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகை கால் கேடட் தற்போது பாரமவுண்ட் பிக்சர்ஸ் தயாரிக்கும் கிளியோபாட்ராவின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரமாக நடிக்கிறார்.

வொண்டர் உமன் திரைப்படத்தின் இயக்குநர் பேட்டி ஜென்கின்ஸ் தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார். இவர்கள் இருவரும் இணைந்திருக்கும் 'வொண்டர் வுமன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 'வொண்டர் வுமன் 1984', வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

கிளியோபாட்ரா படத்தில் நடிப்பது குறித்து கால் கேடட், "இந்த படம் ஒரு பெண்ணின் பார்வையில் இருந்து எடுக்கப்பட இருக்கிறது. எனக்கு புதிய பயணங்கள் மேற்கொள்வது பிடிக்கும். புதிய படைப்புகளில்  ஆர்வம் உண்டு. புதிய கதைகளை உயிர்ப்பிக்கும் ஆச்சரியம் பிடிக்கும். நீண்ட நாட்களாக நான் சொல்ல விரும்பிய கதை கிளியோபாட்ராவினுடையது. இந்த அணிக்கு நன்றி சொல்லித் தீராது" என்றுடுவிட்டரில் பகிர்ந்துள்ள கேடட், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்களை இதில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்பாக, 1963-ம் ஆண்டு, நடிகை எலிசபெத் டெய்லர் கிளியோபாட்ராவாக நடித்தார்.

ஹாலிவுட் திரைப்படத்தில், கிளியோபாட்ராவை வெள்ளை நிறத்தில் இருப்பவராக சித்தரிப்பதன் மூலம், வரலாற்றிற்கு வெண்மை பூசுவதாகவும், திரிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

கிளியோபாட்ராவாக இதற்கு முன் நடித்துள்ள நடிகைகளான எலிசபத் டெய்லர், ஹில்டிகார்ட் நெய்ல், குலௌடி கால்பர்ட் ஆகியோர் மூலம் கிளியோபாட்ரா ஒரு வெள்ளை பேரழகியாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். தற்போது, ஆஸ்கேன்ஸாய் யூத பாரம்பர்யத்தை சேர்ந்த கேல் கேடட் எகிப்தியன் பேரழகியாக நடிப்பது, சிகப்பழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வழக்கமான தவறின் தொடர்ச்சியாக உள்ளது என்று எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.