தெலங்கானாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கு நிவாரண நிதியாக ரூ.1.5 கோடி வழங்குவதாக நடிகர் பிரபாஸ் அறிவித்துள்ளார்.
ஐதராபாத்,
தெலங்கானா மாநிலத்தின் பல பகுதிகளில் வரலாறு காணாத வகையில் பலத்த மழை கொட்டி தீா்த்தது.இதனால் பல இடங்களில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்த விபத்தில் பலர் பலியாயினா். மேலும், மழை காரணமாக ரூ.5,000 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டதாக மாநில அரசு தெரிவித்தது.
வரலாறு காணாத இயற்கைச் சீற்றத்தைச் சந்தித்து வரும் தெலங்கானா மாநில மக்களுக்கு திரை உலகினர் பலரும் உதவி செய்து வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நிதியாக ரூ. 1.5 கோடி வழங்குவதாகப் பிரபல நடிகர் பிரபாஸ் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்க உள்ளதாக பிரபாஸ் அறிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் அரசுப் பள்ளிக்குள் வைத்து ஐந்து சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக தலைமை ஆசிரியர் ஒருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
ஐதராபாத்தில் 1,500 - 2,000 ஏக்கர் பரப்பளவில் விமான இறங்குதளத்துடன் உலக தரத்துடன் கூடிய திரைப்பட நகரம் அமைக்கப்படும் என முதல்வர் சந்திரசேகர்ராவ் தெரிவித்து உள்ளார்.