சினிமா செய்திகள்

ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடிக்கும் புதிய படம் + "||" + Hip Hop Adi New film featuring driver

ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடிக்கும் புதிய படம்

ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடிக்கும் புதிய படம்
ஹிப் ஹாப் ஆதியே புதிய படத்தை இயக்கி கதாநாயகனாக நடிக்க முடிவு செய்துள்ளார்.

பிரபல இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி. இவர் ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை 2, கதகளி, கத்தி சண்டை, இமைக்கா நொடிகள், கோமாளி, ஆக்‌ஷன் உள்பட பல படங்களுக்கு இசைமைத்துள்ளார். மீசையை முறுக்கு என்ற படத்தை இயக்கி கதாநாயகனாகவும் அறிமுகமானார். தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்தார். இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றன. சமீபத்தில் நான் ஒரு ஏலியன் என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டார். தொடர்ந்து புதிய படங்களில் நடிக்க பல இயக்குனர்கள் அவரிடம் கதை சொல்லி வந்தனர். இந்த நிலையில் ஹிப் ஹாப் ஆதியே புதிய படத்தை இயக்கி கதாநாயகனாக நடிக்க முடிவு செய்துள்ளார். இந்த படத்துக்கான வேலைகள் தொடங்கி உள்ளன. படத்தின் பெயர் மற்றும் இதர நடிகர், நடிகைகள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஹிப் ஹாப் ஆதி வெளியிடும் புதிய ஆல்பம் ‘நான் ஒரு ஏலியன்’
இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வரும் ஹிப் ஹாப் ஆதி, சுதந்திர தினத்தில் புதிய ஆல்பத்தை வெளியிட இருக்கிறார்.