சினிமா செய்திகள்

நடிகர் ஆர்.கே. சுரேஷ் திடீர் திருமணம் + "||" + Actor R.K. Suresh's sudden marriage

நடிகர் ஆர்.கே. சுரேஷ் திடீர் திருமணம்

நடிகர் ஆர்.கே. சுரேஷ் திடீர் திருமணம்
நடிகர் ஆர்.கே. சுரேஷ் திடீர் திருமணம் நடந்தது.

பாலா இயக்கிய தாரை தப்பட்டை படத்தில் குரூர வில்லனாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் ஆர்.கே.சுரேஷ். பில்லா பாண்டி படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். மருது, ஹரஹர மகாதேவகி, இப்படை வெல்லும், ஸ்கெட்ச், பில்லா, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். மலையாள படங்களிலும் நடிக்கிறார். விஜய்சேதுபதி நடித்த தர்மதுரை, தம்பிக்கோட்டை, சலீம் உள்ளிட்ட சில படங்களை தயாரித்து இருக்கிறார். திரைப்பட விநியோகஸ்தராகவும் உள்ளார். இவருக்கும், டி.வி நடிகை திவ்யாவுக்கும் ஏற்கனவே திருமணம் நிச்சயமாகி திடீரென்று நின்றுபோனது.

இந்த நிலையில் ஆர்.கே.சுரேசுக்கும் தோழர் வெங்கடேசன் பட தயாரிப்பாளர் மாதவி என்பவருக்கும் ரகசியமாக திடீர் திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்தில் 15 பேர் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. திருமண புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் ஆர்.கே.சுரேஷ் வெளியிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்களும் திரையுலகினரும் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.