சினிமா செய்திகள்

அன்பு கணவரே மகனாக பிறந்துள்ளார்: மேக்னாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது - வாழ்த்து கூறிய ரசிகர்கள்! + "||" + Chiranjeevi Sarja is back: Meghana Raj gives birth to a baby boy

அன்பு கணவரே மகனாக பிறந்துள்ளார்: மேக்னாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது - வாழ்த்து கூறிய ரசிகர்கள்!

அன்பு கணவரே மகனாக பிறந்துள்ளார்: மேக்னாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது - வாழ்த்து கூறிய ரசிகர்கள்!
சிரஞ்சீவி சர்ஜாவும், மேக்னாராஜூம் 10 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு, 

கன்னட திரையுலகில் இளம்நடிகராக வலம் வந்தவர் சிரஞ்சீவி சர்ஜா(வயது 39). இவர் நடிகை மேக்னா ராஜின் கணவர் ஆவார்.  சிரஞ்சீவி சர்ஜாவும், மேக்னாராஜூம் 10 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

சிரஞ்சீவி சர்ஜா, பிரபல நடிகர் அர்ஜூனின் நெருங்கிய உறவினர் ஆவார். கடந்த  ஜூன் 7 தேதி மாதம் திடீரென உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட சிரஞ்சீவி சர்ஜா பெங்களூருவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். 39 வயதே ஆன அவரது மரணத்தால் கன்னட திரையுலகம் சோக கடலில் மூழ்கியுது.

அதன் பிறகு அவரது உடலை பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக கனகபுரா ரோட்டில் உள்ள பண்ணை வீட்டு தோட்டத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு ஒக்கலிக சமூக முறைப்படி இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது மனைவி மேக்னா ராஜ், கணவரின் நெற்றியில் உணர்வுப்பூர்வமாக முத்தமிட்டு நிரந்தரமாக அனுப்பி வைத்தார். இது காண்போரை கண் கலங்க வைத்தது. 

இந்தநிலையில், சில தினங்களுக்கு முன் மேக்னா ராஜ் தனது வளைகாப்பு படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். அதில்,மேக்னா ராஜ் அமர்ந்திருக்க, அவரது அருகில் மறைந்த சிரஞ்சீவி சார்ஜா ஆளுயர கட் அவுட்டுடன் புன்னகைத்த வீடியோ இணையத்தில் பார்ப்போரை உருக வைத்தது.

இந்நிலையில் மேக்னாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. மேக்னா-சிரஞ்சீவி குடும்பத்தினர் குழந்தையை வைத்துக்கொண்டு அன்பை பரிமாறும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இறந்த சிரஞ்சீவியே மகனாக பிறந்திருக்கிறார். மேக்னாவுக்கு வாழ்த்துகள் என ரசிகர்கள் பலரும் நெகிழ்ச்சியாக பதிவிட்டு வருகின்றனர்.