சினிமா செய்திகள்

டுவிட்டரில் இணைந்த சிம்பு + "||" + Simbu joins Twitter

டுவிட்டரில் இணைந்த சிம்பு

டுவிட்டரில் இணைந்த சிம்பு
சிம்பு டுவிட்டரில் இணைந்தார்.

நடிகர், நடிகைகள் டுவிட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் கணக்கு வைத்து தாங்கள் நடிக்கும் புதிய படங்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்து வருகிறார்கள். அரசியல், சமூக கருத்துகளையும் பதிவிடுகிறார்கள். ஆனால் சிம்பு சில வருடங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் இருந்து விலகினார். 

இந்தநிலையில் மீண்டும் அவர் சமூக வலைத்தளத்துக்கு வர இருப்பதாக தகவல் வெளியானது. டுவிட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம், யூடியூப் ஆகிய அனைத்திலும் அவர் இணைய இருப்பதாகவும் கூறப்பட்டது. அதன்படி நேற்று சிம்பு டுவிட்டரில் இணைந்தார். முதல் தடவையாக அதில் தனது வீடியோவை வெளியிட்டுள்ளார். 

அதில் சிம்பு உடற்பயிற்சி செய்வது, சிலம்பம் விளையாடுவது, நடனம் ஆடுவது போன்றவை இடம்பெற்றுள்ளன. சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்காக தனது உடல் எடையை 20 கிலோ குறைத்து இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. 5 மொழிகளில் சிம்பு படம்
சுசீந்திரன் இயக்கும் படத்தில் சிம்பு நடித்து வருகிறார். படத்துக்கு ஈஸ்வரன் என்று பெயர் வைத்து இருப்பதாக அறிவித்துள்ளனர்.