நவம்பர் 12-ல் சூரரைப்போற்று திரைப்படம் ஓடிடியில் வெளியீடு - நடிகர் சூர்யா


நவம்பர் 12-ல் சூரரைப்போற்று திரைப்படம் ஓடிடியில் வெளியீடு - நடிகர் சூர்யா
x
தினத்தந்தி 26 Oct 2020 6:35 AM GMT (Updated: 26 Oct 2020 6:35 AM GMT)

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சூரரைப் போற்று. கடந்த ஏப்ரல் மாதமே ரிலீசாக வேண்டிய இப்படம், கொரோனா லாக்டவுன் காரணமாக தள்ளிப்போனது. 7 மாதங்களாக தியேட்டர்கள்  மூடப்பட்டு இருப்பதால் இப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட இருப்பதாக சூர்யா அறிவித்திருந்தார். இம்மாத இறுதியில் வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், விமானப்படை தரப்பில் இருந்து தடையில்லா சான்று கிடைக்க தாமதமானதால் படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது.

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் தடையில்லா சான்றிதழ் கிடைத்த நிலையில், தற்போது படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ள படக்குழு, படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் தீபாவளி பண்டிகைக்கு 2 நாள் முன்னதாகவே (நவம்பர் 12-ந் தேதி) ரிலீஸ் செய்யப்படுகிறது.  

 இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இறுதிச்சுற்று படத்தின் இயக்குனரான சுதா கொங்கரா இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

Next Story