சினிமா செய்திகள்

நடிகை ராஷ்மிக்கு கொரோனா + "||" + Corona to actress Rashmi

நடிகை ராஷ்மிக்கு கொரோனா

நடிகை ராஷ்மிக்கு கொரோனா
தமிழில் சாந்தனு, சந்தானம் நடித்த கண்டேன் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ராஷ்மி கவுதம்.
தமிழில் சாந்தனு, சந்தானம் நடித்த கண்டேன் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ராஷ்மி கவுதம். மாப்பிள்ளை விநாயகர், தவ்லத் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கு, இந்தி, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். வெப் தொடரிலும் நடிக்கிறார். இந்த நிலையில் ஜபர்தஷ் என்ற தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் ராஷ்மி கவுதம் பங்கேற்றார். அதே படப்பிடிப்பில் கலந்து கொண்ட சுதீர் என்பவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ராஷ்மி கவுதமும் பரிசோதனை செய்து கொண்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. ராஷ்மி கவுதம் தன்னை தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் படப்பிடிப்பில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே அமிதாப்பச்சன், விஷால், பிருத்விராஜ், அர்ஜுன் கபூர், ஐஸ்வர்யா ராய், தமன்னா, ஜெனிலியா, நிக்கி கல்ராணி, மலைக்கா அரோரா, ஐஸ்வர்யா அர்ஜுன் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் கொரோனாவில் சிக்கி மீண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பெண் கைதிகளுடன் தீப விளக்கேற்றி கொண்டாடினர் சிறை அதிகாரிகளுக்கு, தீபாவளி வாழ்த்து தெரிவித்த நடிகை ராகிணி
தீபாவளி பண்டிகைக்காக சிறை அதிகாரிகளுக்கு வாழ்த்து அட்டைகளை தயாரித்து பரிசளித்து நடிகை ராகிணி திவேதி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். மேலும் சக பெண் கைதிகளுடன் சேர்ந்து தீப விளக்கேற்றி தீபாவளியை கொண்டாடினார்.
2. சிரஞ்சீவி சர்ஜாவின் குழந்தைக்கு தொட்டில் சாஸ்திரம் விழா சிருவை நான் என் மகன் வடிவில் காண்கிறேன் நடிகை மேக்னா ராஜ் உருக்கம்
மறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் குழந்தைக்கு தொட்டில் சாஸ்திரம் விழா நேற்று நடந்தது. விழாவின்போது தனது மகன் வடிவில் தன்னுடைய கணவர் சிரஞ்சீவி சர்ஜாவை காண்பதாக நடிகை மேக்னா ராஜ் உருக்கமாக கூறினார்.
3. நடிகை சஞ்சனா, டாக்டரை திருமணம் செய்தாரா? சமூக வலைத்தளத்தில் வைரலாகும் புகைப்படத்தால் பரபரப்பு
போதை பொருள் விவகாரத்தில் கைதான நடிகை சஞ்சனா கல்ராணி, டாக்டரை திருமணம் செய்ததாக சமூக வலைத்தளங்களில் புகைப்படம் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
4. உத்தவ் தாக்கரேயை தரக்குறைவாக பேசியதாக நடிகை கங்கனா ரணாவத் மீது போலீசில் புகார்
உத்தவ் தாக்கரேயை தரக்குறைவாக பேசியதாக நடிகை கங்கனா ரணாவத் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
5. போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம்: நடிகை சஞ்சனா கல்ராணி அதிரடி கைது
போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகை சஞ்சனா கல்ராணி நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தி செல்போன்கள், மடிக்கணினி ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.