சினிமா செய்திகள்

வருங்கால கணவரின் புகைப்படம் வெளியிட்ட காஜல் அகர்வால் + "||" + Kajal Agarwal posted a photo of her fianc

வருங்கால கணவரின் புகைப்படம் வெளியிட்ட காஜல் அகர்வால்

வருங்கால கணவரின் புகைப்படம் வெளியிட்ட காஜல் அகர்வால்
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் வருகிற 30-ந்தேதி தொழில் அதிபர் கவுதம் என்பவரை திருமணம் செய்து கொள்கிறார்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் வருகிற 30-ந்தேதி தொழில் அதிபர் கவுதம் என்பவரை திருமணம் செய்து கொள்கிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்கிறார்கள். திருமண வேலையில் காஜல் அகர்வால் தீவிரமாக உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “திருமணம் முடிந்த கையோடு புதிய வீட்டில் குடியேற இருக்கிறேன். வீட்டுக்கு தேவையான உள் அலங்கார வேலைகளை கவுதம் அவர் விருப்பத்துக்கு ஏற்றவாறு இப்போதே செய்து வருகிறார். ஒரு பக்கம் திருமண வேலை இன்னொரு பக்கம் வீட்டு உள் அலங்கார வேலை என்று இருவரும் பிசியாக இருக்கிறோம். மேலும் கவுதம் வீடுகளுக்கு உள் அலங்கார வேலைகள் செய்து கொடுக்கும் தொழில் செய்வதால் எங்கள் சொந்த வீட்டை பிரத்யேகமாக அழகுப்படுத்தி வருகிறார்” என்றார். காஜல் அகர்வால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவுதமுடன் இணைந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த படம் வலைத்தளத்தில் வைரலாகிறது. திருமணத்துக்கு பிறகும் காஜல் அகர்வால் தொடர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கடலுக்கு அடியில் காஜல் அகர்வால் தேனிலவு
நடிகை காஜல் அகர்வால் கடலுக்கு அடியில் தேனிலவை கொண்டாடினார்.
2. நடிகை காஜல் அகர்வால் மும்பை தொழில் அதிபரை மணக்கிறார் அக்டோபர் 30 ஆம் தேதி திருமணம்
நடிகை காஜல் அகர்வாலுக்கு அக்டோபர் 30 ஆம் தேதி மும்பையில் திருமணம் நடைபெறவுள்ளது. காஜல் அகர்வாலுக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடை பெற இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.