பேரரசு இயக்குவாரா? புதிய படத்துக்கு தயாராகும் விஜய்


பேரரசு இயக்குவாரா? புதிய படத்துக்கு தயாராகும் விஜய்
x
தினத்தந்தி 28 Oct 2020 11:30 PM GMT (Updated: 2020-10-29T02:09:36+05:30)

விஜய்யின் மாஸ்டர் படத்தை பொங்கலுக்கு நேரடியாக தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டு உள்ளனர்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தது. இது விஜய்க்கு 65-வது படம். படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படலாம் என்று எதிர்பார்த்த நிலையில் படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனாவால் படத்தின் பட்ஜெட்டை குறைக்க பட நிறுவனம் திட்டமிட்டு உள்ளதாகவும், முருகதாஸ் எதிர்பார்த்த சம்பளத்தை கொடுக்க தயங்கியதால் அவர் விலகி விட்டார் என்றும் கூறப்படுகிறது. எனவே விஜய்யின் புதிய படத்தை இயக்குவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. பேரரசு, மகிழ் திருமேனி, மோகன் ராஜா, ஹரி உள்ளிட்டோர் பெயர்கள் அடிபடுகின்றன. ஆனாலும் பேரரசுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் நடித்த திருப்பாச்சி, சிவகாசி ஆகிய படங்களை பேரரசு இயக்கி உள்ளார். இரண்டு படங்களும் நல்ல வசூல் பார்த்தன. ஏற்கனவே பேரரசு அளித்த பேட்டியில், “நான் விஜய்க்காக கதை தயார் செய்து வைத்து இருக்கிறேன் என்பது உண்மை. நானும், எனது கதையும் விஜய்க்காக காத்திருக்கிறோம் என்பதும் உண்மை” என்று கூறியிருந்தார். இயக்குனர் யார் என்பது விரைவில் வெளியாகும் என்றும், தொடர்ந்து படப்பிடிப்புக்கு விஜய் தயாராவார் என்றும் கூறப்படுகிறது.

Next Story